புதுக்கோட்டை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடையாள அட்டை இன்றி சிலர் மேடையில் ஏறியதாக கூறி இரண்டு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை நடத்துவது வழக்கம். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய அடையாளத்தை பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டி, வடமாடு இழுத்தல், உள்ளிட்ட வீர விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தச்சன்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இது தான் இந்த ஆண்டில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும். அதாவது தச்சன்குறிச்சியில் விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு நிகழ்ச்சியுடன் பொங்கல் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பொங்கல் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் 750 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை அமைச்சர் ரகுபதி மற்றும் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே அரங்கமே அதிரும் அளவில் மோதலுடன் தொடங்கியது. ஏனெனில் ஜல்லிக்கட்டு மேடையில் அடையாள அட்டையின்றி சிலர் ஏறியதால் விழா குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் நாற்காலியால் தாக்கிக் கொண்டனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் பிரித்து சமரசம் பேசினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ஜல்லிக்கட்டை காண வந்த மக்கள் விழாக்குழுவினரின் மல்லுக்கட்டையும் சேர்த்து குதூகலமாக பார்த்து மகிழ்ந்து விட்டு சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}