#JailerReview ஜெயிலர் சம்பவம்...வேற லெவலில் பட்டை கிளப்பிய ரஜினி-நெல்சன் காம்போ

Aug 10, 2023,09:26 AM IST

படம்: ஜெயிலர்

நடிப்பு: ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், யோகிபாபு

இயக்கம்: நெல்சன் திலீப் குமார்

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்




டைரக்டர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 169 வது படமாக உருவாகி உள்ளது ஜெயிலர். ரசிகர்களாலும், திரையுலகினரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதியான இன்று ரிலீசாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் காலை 6 மணிக்கும் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ திரையிடப்பட்டது. ஐகோர்ட் உத்தரவு காரணமாக தமிழகத்தில் காலை 9 மணிக்கு படம் ரிலீஸ் செய்யப்பட்டது.


பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்ததால் நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து எப்படி படம் எடுத்திருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அனிருத் இசையில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்தில், சர்வதேச லெவலில் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதற்காக ஜாக்கி ஷரோஃப், மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே நடிக்க வைத்துள்ளார் நெல்சன்.


காமெடி கலந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற சிறைத்துறை அதிகாரியாக ரஜினி. அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன். பணி ஓய்விற்கு பின்னர் சென்னையில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் முத்துவேல் பாண்டியன். தனது 6 வயது பேரன் யூட்யூப் சேனல் நடத்துவதற்கு, வீட்டிற்கு தேவையானவற்றை செய்வதுமாக இருந்து வருகிறார் ரஜினி. அவரது மகன் அர்ஜூன், நேர்மையான போலீஸ் அதிகாரியாக அசிஸ்டென்ட் கமிஷனர். 


சிலை கடத்த தொடர்பாக விசாரணை நடத்தி முக்கிய புள்ளி ஒருவரை கைது செய்கிறார். பிறகு திடீரென காணாமல் போகும் மகனை தேடும் பணியில் இறங்குகிறார் ரஜினி. மகன் விசாரித்த வழக்குகள், அவரால் செய்யப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தேடுகிறார். அந்த சமயத்தில் வில்லன்களால் மகன் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. ஆனால் சில நாட்களுக்கு பிறகு மகன் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை ரஜினி தெரிந்து கொள்கிறார். வில்லகளிடம் இருந்து தனது மகனை மீட்பதற்காக தனது பழைய நண்பர்களின் உதவியை கேட்கிறார் ரஜினி.


வில்லன்களிடம் இருந்து மகனை எப்படி மீட்கிறார், வில்லன்கள் தரும் தொல்லையில் இருந்து தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் மீதி கதை. இதை யோகிபாபுவின் காமெடியுடன் கலந்து சொல்லி இருக்கிறார் நெல்சன். 


ஃபர்ஸ்ட் ஆஃப் :


ஃபர்ஸ்ட் முழுவதும் ரஜினி - யோகிபாபுவின் காமெடி, ரஜினியின் ஸ்டைல் என பட்டையை கிளப்பி உள்ளார்கள். அனிருத்தின் மாசான இசையில் ரஜினியின் என்ட்ரி வேற லெவலில் இருக்கிறது. ரஜினியின் என்ட்ரி, நீலாம்பரி ஸ்டைலில் ரம்யா கிருஷ்ணன் பேசும், வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறவில்லை என்ற வசனத்தின் போதும் தியேட்டரில் விசில் பறக்கிறது. விநாயகன் அசத்தலாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மிரமிக்க வைக்கும் வகையிலு��், மிரட்டும் வகையிலும் விநாயகனை பயன்படுத்தியுள்ளார் நெல்சன்.


படத்தில் பாட்ஷா ஃபிளேவர் தூக்கலாகவே இருக்கிறது. பாட்ஷா ஸ்டைலில் இன்டர்வெல் செம வைப். ஃபர்ஸ்ட் ஆஃப் முழுவதும் ஒரு நிமிடம் கூட போரடிக்காத படி சென்றுள்ளனர். ஹூக்கும் ஹூக்கும் பாடலுக்கு தியேட்டரில் அனல் பறக்கிறது. அதேபோலத்தான் காவாலா பாட்டுக்கு தியேட்டரே தமன்னாவுடன் சேர்ந்து ஆடுகிறது.


செகண்ட் ஆஃப் :


செகண்ட் ஆஃப் முழுவதும் ரஜினியின் மாஸ் ஆக்ஷன் காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள் என ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளனர்.  இனி பேச்சு இல்ல வீச்சு தான் என்பது உள்ளிட்ட ரஜினியின் டயலாக்குள் அல்டிமேட். செகண்ட் ஆஃப்பில் வரும் பிளாஷ்பேக், மூன்று முகம் ரஜினியை கண் முன் கொண்டு வருகிறது. 




பிளஸ் :


ஆரம்பம் முதல் கடைசி வரை கொஞ்சமும் சலிப்படைய வைக்காமல் படத்தை செம ஸ்பீடாக கொண்டு சென்றுள்ளனர். யோகிபாபுவின் காமெடி, அனிருத்தின் இசை, பாடல்கள், தெளிவான திரைக்கதை ஆகியவை படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். ரொம்ப நாள் கழிச்சு ரஜினியை பாட்ஷா ஸ்டைலில் பார்க்க வைத்துள்ளார் நெல்சன். வில்லனாக வரும் விநாயகன் நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார். ரஜினிக்கு ஒரு புதிய முகத்தையே தந்து விட்டார் நெல்சன் என்று தான் சொல்ல வேண்டும். ஷிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் சில சீன்கள் மட்டுமே வந்தாலும் தங்கள் ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.


மைனஸ் :


மைனஸ் என்று பார்த்தால் பெரிதாக எதையும் சொல்ல முடியாது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடம் என்பது தான் ரொம்ப நீளமாக இருப்பதாக ரசிகர்கள் சிலர் சொல்கின்றனர். மோகன்லால், ஷிவ் ராஜ்குமார் போன்ற சீனியர் நடிகர்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். குடும்ப சென்டிமென்ட், வில்லன்களுடனான சீன்கள் உள்ளிட்ட பல சீன்கள் பாட்ஷா படத்தை ரீமேக் செய்துள்ள உணர்வை ஏற்படுத்துகிறது.


படம் எப்படி இருக்கு ?


மொத்தத்தில் ஜெயிலர் ரசிகர்களின் மனதை வென்று விட்டார். மிகப் பெரிய பிளாக்பஸ்டர் என்பது உறுதியாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு ஒரே வார்த்தையில் விமர்சனம் சொல்ல வேண்டும் என்றால் தலைவர் மாஸ் நிரந்தரம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஜினிக்கு இருக்கும் மாசை வேறு எந்த நடிகராலும் மிஞ்ச முடியாது என்பதற்கு ஜெயிலர் படம் மீண்டும் ஒரு உதாரணம்.


ஜெயிலருக்கு தென்தமிழ் தரும் மார்க்: 3.5

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்