ரஜினியை ஓரம்கட்டிய தமன்னா ஃபீவர்.. அரபிக்குத்தை மிஞ்சிய "காவாலா"

Aug 06, 2023,02:27 PM IST

சென்னை : ஜெயிலர் பட ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் உலகம் முழுவதும் ரஜினி ஃபீவர் உச்சத்தை எட்டி உள்ளது. இந்த சமயத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான காவாலா பாடல் யூட்யூப்பில் 102 மில்லியன் பார்வைகளை எட்டி உள்ளது. 


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். இந்த படம் ஆகஸ்ட் 10 ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இதற்கான ப்ரீ புக்கிங் துவங்கி விட்டதால் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்டே ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். படம் ரிலீசிற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கையில் இப்போதே ட்விட்டரில் #JailerFDFS ஹேஷ்டேக் டிரெண்டாக துவங்கி விட்டது. 


ரசிகர்களை வெறியேற்றும் வகையில் புதிய போஸ்டர், தியேட்டர் டிரைலர், 3வது பாடல் என அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது படக்குழு. ஆனாலும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்ட காவாலா பாடல் தான் டிரேண்டிங்கில் தொடர்ந்து டாப்பில் இருந்து வருகிறது.




அனிருத் இசையில், ஷில்பா ராவ் பாடி, தமன்னா செம ஆட்டம் போட்ட காவாலா பாடல் ஜூலை 6 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. கேட்டதுமே ஆட்டம் போட வைக்கும் இந்த பாடல் தேசிய அளவில் டிரெண்டாகி விட்டது. பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு பிறகு யூட்யூப்பில் மிக குறுகிய காலத்தில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடலாக காவாலா பாடல் உள்ளது. பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு ஆடி ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.


அரபிக்குத்து, ரஞ்சிதமே, ரெளடி பேபி, செல்லம்மா பாடல் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளது காவாலா பாடல். இந்த பாடல் வெளியிட்ட ஒரு மாதத்தில் யூட்யூப்பில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனால் திரும்பிய பக்கமெல்லாம் காவாலா பாடல் தான் ஒலித்து வருகிறது. இதை சோஷியல் மீடியாவில் ரஜினி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிக்கிறார்கள். இதனால் ட்விட்டர் முழுவதும் காவாலா பாடலின் வீடியோ க்ளிப்கள் குவிந்து கிடக்கிறது. 


காவாலா பாடலுக்கு பிறகு தமன்னாவின் மார்கெட் எங்கோ போய் விட்டது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் பக்கம் தலைகாட்டாமல் இருந்த தமன்னா, தற்போது காவாலா பாடல் மூலம் மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் தமிழில் புதிய படங்கள் பலவற்றில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவை புக் செய்ய தயாரிப்பாளர்கள் பலரும் போட்டி போட்டு வருகின்றனர்.


சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்