"ஜெய் ஸ்ரீராம்" என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம்.. பாஜக கருத்து

Oct 15, 2023,03:31 PM IST

சென்னை:  ஜெய் ஸ்ரீராம்' - என்று இந்தியா - பாகிஸ்தான்  கிரிக்கெட் போட்டியில் இருந்த ரசிகர்கள் சொன்னது தவறானது, வெறுப்பானது என்றெல்லாம் கூறியிருக்கிறார் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின். ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டிவீட்:


ஜெய் ஸ்ரீராம்' - என்று இந்தியா - பாகிஸ்தான்  கிரிக்கெட் போட்டியில் இருந்த ரசிகர்கள் சொன்னது தவறானது, வெறுப்பானது என்றெல்லாம் கூறியிருக்கிறார் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள். ஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். 

ராம ராஜ்ஜியம் என்பது தான் ஒவ்வொரு இந்தியனின் கனவும் கூட. ரசிகர்களின், மக்களின் நம்பிக்கைகளை, உணர்வுகளை மதிக்க தெரியாதவர்களுக்கு இதெல்லாம் புரியாது தான். 




பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு செல்லும் போது அந்த நாட்டில் உள்ள ரசிகர்கள் நம் நாட்டு விளையாட்டு வீரர்களை எப்படியெல்லாம் இழிவாக தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்கள்  என்பது உதயநிதிக்கு தெரியுமா? பாகிஸ்தானில் நம் நாட்டு வீரர்களை கற்களால் அடித்த நிகழ்வுகள்  உதயநிதிக்கு தெரியுமா? மற்றொரு நாட்டில், உன் அப்பா பெயர் என்ன? என்று நம் நாட்டு வீரர்களை என்று ரசிகர்கள் கேட்டபோது உதயநிதி எங்கிருந்தார்? 


நாசகார செயல்களில் ஈடுபடும் ஹமாஸ், ஐ எஸ் உள்ளிட்ட நம் நாட்டில் உள்ள இதர பயங்கரவாத இயக்கத்தினர் கூட அழிவுகளை ஏற்படுத்தும் போது ,'அல்லாஹு-அக்பர்' என்று சொல்வதை, அதாவது இறைவனே மிகப் பெரியவன் என்று சொல்வதை  உதயநிதி கேள்விப்பட்டிருக்கிறாரா? அது தவறில்லையா? ஒரு மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை உதயநிதி கண்டிப்பாரா?


ரசிகர்கள் தங்களுக்கு எது உற்சாகத்தை கொடுக்குமோ அந்த கோஷங்களை எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் உரிமையில் தலையிட உதயநிதி யார்? அந்த ரசிகர்கள் மற்றொரு மதத்தை புண்படுத்தி பேசியிருந்தால் கண்டிப்பதில் நியாயம் உள்ளது. 


கோவையில் 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளை 'முஸ்லிம்' கைதிகள் என்று மத ரீதியாக அடையாளப்படுத்தி பேசுபவர்கள், தங்களின் அணி வெற்றி பெற்றதை கொண்டாடுவதற்கு தங்களின் கடவுளை 'ஜெய் ஸ்ரீராம்' என்று போற்றி பாடுவதை கண்டிப்பதற்கு தகுதியில்லை.  விளையாட்டு அமைச்சர் விளையாட்டில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நம்பிக்கைகளில் விளையாட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்