தமிழ்நாடு முழுவதும் .. ஜாக்டோ ஜியோ சார்பில்.. ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்!

Jan 30, 2024,06:05 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீசாருக்கும்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. .


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர் கல்விக்கான ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களையும் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்திருந்தது.




இதன்படி, இன்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் டிபிஐ வளாகம் எதிரில் 150 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. 


அங்கு வந்த ஐம்பதுக்கு மேற்பட்ட போலீசார் அவர்களை கைது செய்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். சென்னை மட்டும் இன்றி மதுரை, கோவை, தஞ்சாவூர், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று போராட்டம், சாலை மறியல் போராட்டம்  நடத்தினர்.




போராட்டம் குறித்து பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் கூறுகையில், எங்களுடைய பிரதான கோரிக்கை என்பது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியருக்கு ஒன்றிய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலம் வரை ஊதியம் பெற்று வரும் சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.




கடந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது மூன்று அமைச்சர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையின் போது கூறப்பட்ட எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் போல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களின் கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி தர வேண்டும். ஒருவேளை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மாநில அளவில் அடுத்த கட்ட போராட்டத்தை தீவிரமாக நடத்துவோம் என்றார்.




இந்நிலையில் வரும் பிப்ரவரி 5 முதல் 9 வரை அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது, பிப்ரவரி 10 மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு, பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், பிப்ரவரி 24 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு ஜாக்டர் ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்