1000 வருடத்தைக் கடந்த.. இத்தாலியின் சாய்ந்த கோபுரம்.. உடையப் போகிறது.. நிபுணர்கள் எச்சரிக்கை!

Dec 02, 2023,05:58 PM IST

போலோக்னா, இத்தாலி:  இத்தாலியின் போலோக்னா நகரில் உள்ள உலகப் புகழ் பெற்ற காரிசென்டா சாய்ந்த கோபுரம், கீழே விழுந்து உடையப் போவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


போலோக்னாவில் உள்ள இந்த சாய்ந்த கோபுரமானது, இத்தாலியில் உள்ள சில சாய்ந்த கோபுரங்களில் ஒன்றாகும். கிட்டத்தட்ட 1000 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டது இது. போலோக்னா நகரிலேயே மிகவும் உயரமான கட்டடம் இதுதான். ஆனால் இந்த கோபுரமானது அபாயகரமான அளவை எட்டி விட்டதால் விரைவில் இது உடைந்து விழும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


150- அடி உயரம் கொண்ட இந்த கோபுரமானது, கடந்த 14வது நூற்றாண்டிலிருந்து 4 டிகிரி அளவுக்கு சாயத் தொடங்கியது. இந்த கோபுரம் விழுவதைத் தடுக்கும் வகையில் கோபுரத்தின் உச்சிப் பகுதியை அகற்றி விட்டனர். அப்படியும் இது சாய்வதை நிறுத்தவில்லை. தொடர்ந்து சாய்ந்து கொண்டே வருகிறது. தற்போது கீழே விழும் அளவுக்கு அது வந்து விட்டதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




இந்த கோபுரத்தின் பழமை, இதன் பெருமை, கட்டடக் கலை உள்ளிட்டவற்றை மனதில் வைத்து இதை சரி செய்யும் பணிகள் பல வருடங்களாக, பல விதமாக நடந்துள்ளன. ஆனாலும் அது பலன் தரவில்லை. தற்போது கோபுரம் விழுவதைத் தவிர்க்க முடியாது என்றும் எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அந்தப் பகுதியைப் பாதுகாக்கும் திட்டங்களில் நகர அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.


கோபுரம் சரிந்து விழும்போது ஏற்படும்  சிதறல்களால் வீடுகள் அக்கம் பக்கத்து கட்டடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அபாயகரமான தொலைவில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் திட்டம் யோசிக்கப்பட்டு வருகிறது.


பைசா நகர சாய்ந்த கோபுரம்




இத்தாலியில் உள்ள இன்னொரு மிகப் பிரபலமான சாய்ந்த கோபுரம், பைசா நகரில் உள்ளது. கிறிஸ்தவ பேராலய வளாகத்திற்குள் இந்த சாய்ந்த கோபுரம்  உள்ளது. இது மணிக்கூண்டு கோபுரமாகும். இதுவும் கிட்டத்தட்ட 650 ஆண்டுகள் பழமையானதாகும். 1173ம்  ஆண்டு கட்ட ஆரம்பித்து 1372ம் ஆண்டு இதை முடித்துள்ளனர். பல கட்டங்களாக இதன் கட்டுமானப்  பணிகள் நடந்து வந்தன. பைசா நகர கோபுரமும் 5 டிகிரி அளவுக்கு சாய்ந்து கொண்டே வருகிறது. இது முழுமையாக சாய்வதைத் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது சாய்வதையும் தடுக்க முடியவில்லை. 


பைசா நகர கோபுரத்துக்கு சீனியர்தான் தற்போது அபாய கட்டத்தை நெருங்கியுள்ள காரிசென்டா கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் வெறும் காற்றுதான் வீசுது.. மழை இல்லை.. பல மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று லீவு!

news

தமிழ்நாட்டை நோக்கி வேகமாக.. நகர்ந்து வருகிறது ஃபெங்கல் புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

Tirupati temple.. திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.15,000 திருடியவர் கைது.. தலைக்கு தில்லுதான்!

news

Cyclone Fengal: இன்னிக்கு சென்னையில் நேத்து மாதிரியெல்லாம் பெருசா மழை இருக்காது..தமிழ்நாடு வெதர்மேன்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 27, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Cyclone Fengal: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் அதி கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 11 மாவட்டங்கள்!

news

கனமழை எதிரொலி.. கடலோர மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் இருக்கவும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

news

புயல் எங்கு எப்போது கரையைக் கடக்கும்.. IMD சென்னை தலைவர் பாலச்சந்திரன் சொல்வது என்ன?

news

திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறில்லை.. அவரது எழுச்சி பிரமாதமாக இருக்கிறது.. நடிகர் பார்த்திபன்

அதிகம் பார்க்கும் செய்திகள்