சென்னை: என்னை அரசியலுக்கு வரவைப்பது கடினம் என்றார்கள்; என்னை வெளியேற்றுவது அதைவிடக் கடினம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சினிமா, பிக்பாஸ் என்று கலகலப்பாக போய்க் கொண்டிருந்த கமல்ஹாசன் இன்று தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7வது ஆண்டு விழாவை கட்சியினருடன் கோலாகலமாக கொண்டாடினார். இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
நாட்டு மக்களின் குடியுரிமை ஆட்டம் கண்டுள்ளது. விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்துள்ள நன்மையில் 10 சதவீதம் கூட மத்திய அரசு செய்யவில்லை. விவசாயிகளை தடுக்க ஆணி படுக்கையை சாலையில் போட்டுள்ளது மத்திய அரசு. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள் தான் ஆட்சியில் உள்ளவர்கள்.
என்னை அரசியலுக்கு வர வைப்பது கடினம் என்றார்கள். என்னை வெளியேற்றுவது அதைவிட கடினம். எதிரி படையை நடத்துவது போல் விவசாயிகளை நடத்துகிறது மத்திய அரசு. மக்கள் நீதி மையத்தை போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. ஜாதி மத சலக்குகள் இருக்கும் வரை வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது.
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இரு பெரும் தேர்தல்களை எதிர்கொண்டு விட்டோம். பணபலம், ஊடக பலமும், முன் அனுபவமோ சிறிதுமின்றி மக்களை சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளை பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும் தலைமைக்கு தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயக தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இருக்க வேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.மக்கள் நீதி மையத்தை போன்ற ஜனநாயக சக்திகள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
நான் முழுநேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றேன். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை. முழு நேர அப்பன் இல்லை. மகனும் இல்லை. முழு நேர குடிமகனாக இருந்து ஓட்டு போடுவதாக தான் கேள்வி கேட்கின்றனர். கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை அவர்கள்தான் நான் தோல்வியடைய காரணம் என்று கூறினார்கள்.
என் அரசியல் பயணம் தனித்துவமானது நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டோம் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று இந்த ஏழு ஆண்டுகளில் கற்றுக் கொண்டோம். ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தான் நமக்கு கிடைக்கின்றது. என் சகோதரர்கள் பீகாரில் இருக்கின்றனர், நன்றாக இருக்கட்டும் என்றார் கமல்ஹாசன்.
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}