விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் SSLV-D3 ராக்கெட்.. புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது EOS08!

Aug 16, 2024,07:30 PM IST

ஸ்ரீஹரிகோட்டா : புவி கண்காணிப்பு செயற்கோளான EOS085 ஏந்தியபடி, விண்ணில் பாய்ந்தது இஸ்ரோ அனுப்பிய எஸ்எஸ்எல்வி டி3 ராக்கெட். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக 75.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டெமோசாட் செயற்கைகோள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை இஸ்ரோவின் SSLV-D3  ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தியது. 





ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 16) காலை 09.17 மணிக்கு SSLV-D3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி, லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர். 

பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் தொலைவில் புவி தாழ் வட்டப் பாதையில் தற்போது இஓஎஸ் 08 செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக இ.ஓ.எஸ்-8 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி ஆந்திராவில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று சுவாமி  தரிசனம் செய்து வேண்டிக் கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்