பெங்களூரு: நிலவில் இரவு முடிந்து விடிந்து விட்டதால், தென் துருவப் பகுதியில் உறக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவரையும், விக்ரம் லேண்டரையும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து சந்திரயான் -3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 40 நாட்கள் பயணித்து நிலவை சென்றடைந்தது சந்திரயான் 3. அதன் பின்னர் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரானது ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6 .04 மணி அளவில் நிலவின் தென்முனையில் தரையிறக்கப்பட்டது.
நிலவின் தென் முனையில் இறங்கிய முதல் நாடாக இந்தியா வரலாறு படைத்தது. தரை இறங்கிய லேண்டரிலிருந்து பின்னர் பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. இரண்டும் இணைந்து புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி வைத்தன. அவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ரோவர் நிலவில் மெல்ல நடை போட்டு, நிலவின் தன்மை, காற்று அதில் உள்ள மூலக்கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டது. நிலவில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம் ,
டைட்டானியம், மாங்கனீஸ், சிலிக்கான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்தது. பிறகு நிலவின் தென் பகுதியின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியது.
ஆய்வுகளை தொடங்கிய நிலையில் நிலவில் இரவு வந்தது. நிலவில் பகல் என்பது 14 நாட்களாகும். அதே போல இரவு என்பதும் 14 நாட்களாகும். அதாவது நம்ம பூமியில் எப்படி ஒரு நாள் என்பது 24 மணி நேரமோ அதுபோல நிலாவில் ஒரு நாள் என்பது 28 நாட்களாகும். இரவு நேரங்களில் நிலவில் உறை பனி மிக மிக அதிகம் இருக்கும். எனவே கடந்த 14 நாட்களாக விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தூக்க நிலையில் வைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது நிலவில் மீண்டும் பகல் வந்துள்ளது. சூரிய ஒளியும் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து லேண்டரையும், ரோவரையும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர் .இந்த முயற்சி இதுவரை பலன் தரவில்லை, இருவரையும் எழுப்ப முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லேண்டரும், ரோவரும் விழித்து எழுந்து மீண்டும் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது பல்வேறு வகையான புதிய தகவல்களை நம்மால் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
{{comments.comment}}