2 செயற்கைகோள்கள் இணைப்பு வெற்றி.. அசத்திய இஸ்ரோ.. விண்வெளியில் வரலாறு படைத்த இந்தியா!

Jan 16, 2025,04:46 PM IST

ஸ்ரீஹரிகோட்டா: PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்ட SpaDex திட்டத்தின் கீழான 2 செய்கைகோள்களும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் செயற்கை கோள் அல்லது விண்கலங்களை இணைக்கும் 4வது நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.


அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவும் 2 செயற்கைகோள்களை இணைக்கும்  முயற்சியில் ஈடுபட்டு அதற்கான ஆய்வில் தீவிரமாக இறங்கியது.  இதன் தொடர்ச்சியாக, ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் வடிவமைக்கப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் பிஎஸ்எல்சி சி-60 என்ற ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. இந்த முயற்சி கடந்த வாரமே செயல்படுத்தப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் இணைப்புத் திட்டம் தள்ளிப்போனது.




கடந்த ஜனவரி 7ம் தேதி விண்ணில் இணையச்செய்வதற்கான திட்டம் கைவிடப்பட்ட நிலையில், (இன்று) ஜனவரி 16ம் தேதி இரண்டு செயற்கைகோள்களையும் விண்ணில் இணைக்கும் டாக்கிங் செயல்முறை செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றது. இந்த அறிவிப்பை இஸ்ரேல் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. 


இது குறித்து இஸ்ரோ எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடாக இந்தியா உருவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா  சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.


இந்த நடவடிக்கையானது, எதிர்காலத்தில் விண்வெளியில் விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளுக்கு மிகப் பெரிய உந்துதலாக இருக்கும் என்பது முக்கியமானது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

அதிகம் பார்க்கும் செய்திகள்