தக்க சமயத்தில் சரியான பதிலடி கொடுப்போம்.. காத்திருங்கள்.. ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

Apr 15, 2024,05:55 PM IST

டெல் அவிவ்: ஈரான் நடத்திய தாக்குதலுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.


சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகம் மீடு நடத்தப்பட்ட தாக்குதலில் பல முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஈரான் கடும் கோபமடைந்தது. இஸ்ரேல்தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று ஈரான் மற்றும் சிரியா நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன. இதற்கு சரியான பதிலடி தரப்படும் என்றும் ஈரான் எச்சரித்திருந்தது


இந்த நிலையில் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசியும், டிரோன்கள ஏவியும் தாக்குதல் நடத்தியது ஈரான். இஸ்ரேல் மீது சமீப காலத்தில் ஈரான் நடத்திய மிகப் பெரிய முதல் நேரடித் தாக்குதல் இது. இருப்பினும் பெரும்பாலான ஏவுகணைகளை தடுத்துத் தாக்கி நடு வானிலேயே அழித்து விட்டது இஸ்ரேல். இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.




இஸ்ரேலைத் தாக்க வேண்டாம், அப்படித் தாக்கினால், இஸ்ரேலைக் காக்க அனைத்து உதவிகளையும் அளிப்போம் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால் அதை ஈரான் பொருட்படுத்தவில்லை. ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் பதட்டம் எழுந்துள்ளது.


இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் உடனடியாக பதில் தாக்குதலை நடத்தவில்லை. அது பெரிய அளவிலான போரில் கொண்டு போய் விட்டு விடும் என்பதாலும், ஈரான் மிகப் பெரிய ராணுவத்தை தன் வசம் வைத்திருப்பதாலும், அணு ஆயுத நாடு என்பதாலும், அமெரிக்காவின்  அழுத்தம் காரணமாக இஸ்ரேல் அமைதி காக்கிறது.


அதேசமயம், ஈரானுக்கு தக்க சமயத்தில் பொருத்தமான பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஈரானுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும், எப்போது அளிக்க வேண்டும் என்பதை பின்னர் முடிவு செய்வோம்.  ஆனால் கண்டிப்பாக சரியான பொருத்தமான பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.


அதேசமயம், ஐ.நா. சபைக்கான ஈரான் பிரதிநிதி கூறுகையில், எங்களது தூதரகம் மீதான தாக்குதல், எங்களது நாட்டின் மீதான தாக்குதலுக்கு சமம். எங்களது இறையாண்மையைக் காக்கும் முழு உரிமையும் எங்களுக்கு உண்டு. சுய பாதுகாப்புக்காக நாங்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளோம். அதற்கு முழு உரிமையும் ஈரானுக்கு உண்டு  என்று கூறியுள்ளார்.


பின்வாங்கும் அமெரிக்கா


இதற்கிடையே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேல் நிலைப்பாட்டின்போது ராணுவ ரீதியாக எந்த உதவியும் செய்வதில்லை என்ற முடிவை தற்போது அமெரிக்கா எடுத்திருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவுடன் அதிபர் ஜோ பிடன் பேசினார். அப்போது இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்போம். அதேசமயம், ராணுவ ரீதியான ஆதரவை அமெரிக்கா தராது என்று அதிபர் பிடன் தெளிவுபடுத்தியுள்ளார் என்றார்.


இருப்பினும், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின்போது ஏவுகணைகளை தடுத்து அழிக்க அமெரிக்காதான் உதவியுள்ளது. இதனால்தான் இஸ்ரேல் பெரும் சேதத்திலிருந்து தப்பியுள்ளது. இல்லாவிட்டால் இஸ்ரேலுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.


இஸ்ரேலைக் காக்க அணி சேர்ந்த நாடுகள்


இந்த நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் இஸ்ரேல், இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் அதன் நேச நாடுகள் அணி சேர்ந்திருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த கூட்டணி காரணமாக, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் அது கூறியுள்ளது. ஈரானுக்கு எதிராக முதல் முறையாக நாங்கள் அணி சேர்ந்துள்ளோம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.


இஸ்ரேல் - ஈரானைப் பொறுத்தவரை படை பலத்தில் இரு நாடுகளும் கிட்டத்தட்ட சம பலம் வாய்ந்தவை. சில விஷயங்களில் ஈரானின் கை ஓங்கியுள்ளது. சிலவற்றில் இஸ்ரேல் வலுவாக உள்ளது. இதற்கு முன்பு இஸ்ரேல் மோதி வந்த போராளிகள் அமைப்புகளைப் போல ஈரானை எடுத்துக் கொள்ள முடியாது. இதனால்தான் இஸ்ரேல் பதிலடித் தாக்குதலில் உடனடியாக இறங்கவில்லை. அப்படிச் செய்தால் ஈரான் முழு வீச்சில் களம் குதிக்கும் அபாயம் உள்ளது. மேலும் ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் போரில் குதித்து விட்டால் மிகப்பெரிய நாசமே உண்டாகும் என்பதால்தான் இஸ்ரேலை அமைதிப்படுத்தி வைத்திருக்கிறது அமெரிக்கா என்று சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்