"நம்ம மெஸ்ஸி இருக்காருல்ல.. அந்த ஊர்க்காரப் பொண்ணுப்பா நானு".. பலே பாட்டி.. இறங்கி வந்த ஹமாஸ்!

Mar 08, 2024,09:53 PM IST

கிப்புட்ஸ் நீர் ஓஸ் (இஸ்ரேல்): ஹமாஸ் போராளிகள் திடீரென வீடு புகுந்து மிரட்ட ஆரம்பித்ததால் அதிர்ச்சி அடைந்த 90 வயதுப் பாட்டி ஒருவர்.. பாஷா பட பாணியில் "எனக்கு இன்னொரு நாடு இருக்கு" என்று கூறி ஹமாஸ் போராளிகளையே ரிலாக்ஸ் ஆக்கி உயிர் தப்பியுள்ளார்.


பாஷா படத்தில் ரஜனியை யார் என்று தெரியாமல் சவால் விட்டு மிரட்டிக் கொண்டிருப்பார் கல்லூரி கரஸ்பான்டென்ட். அப்போது ரஜினி, எனக்கு இன்னொரு பேரு இருக்குன்னு அமைதியாக சொல்வார்.. அதைக் கேட்டதும் ஆடிப் போய் விடுவார் அந்த மிரட்டல் கல்லூரி நிர்வாகி.. அப்படி ஒரு கதை இஸ்ரேலில் நடந்துள்ளது.


கடந்த வருடம் அக்டோபர் 7ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்போதுதான் அது வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.  இஸ்ரேலின் கிப்புட்ஸ் நீர் ஓஸ் என்ற இடத்தைச் சேர்ந்தவர் எஸ்தர் கூனியோ. 90 வயதாகிறது இந்தப் பாட்டிக்கு. சம்பவ தினத்தன்று  திடீரென ஆயுதம் தாங்கிய ஹமாஸ் போராளிகள் வீட்டுக்குள் புகுந்து விட்டனர்.




வீட்டில் மொத்தம் 8 பேர் இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் சிறை பிடித்துச் சென்றனர். அதில் தற்போது இந்தப் பாட்டி உள்பட 5 பேர் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து பிணைக் கைதிகளாக உள்ளனர்.


இந்த நிலையில் போராளிகளிடமிருந்து தான் தப்பியது குறித்து சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார் பாட்டி.  மேலும் ஒரு புதிய டாக்குமென்டரியிலும் தோன்றவுள்ளார் இப்பாட்டி. அதில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்தும் விளக்கியுள்ளார் இப்பாட்டி.


அதில் அவர் கூறுகையில், அக்டோபர் 7ம் தேதி 2 பேர் வீட்டுக்குள் புகுந்தனர்.  அப்போது எனக்குள் ஒரு யோசனை தோன்றியது. அவர்களைப் பார்த்து.. நீங்க கால்பந்து பாப்பீங்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் என்று தலையசைத்தனர். அப்போது நான், லியோனல் மெஸ்ஸியின் நாட்டிலிருந்து வந்தவள் நான் என்றேன்.


அதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர்களில் ஒருவர், எனக்கு மெஸ்ஸியைப் பிடிக்கும். பின்னர் அவர் என்னுடன் ஒரு செல்பி எடுத்துக் கொண்டார்.  மெஸ்ஸி பெயரைப் பயன்படுத்தியதால்தான் நானும் எனது குடும்பமும் அன்று தப்பினோம் என்று பாட்டி கூறியுள்ளார்.


லியோனல் மெஸ்ஸி அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர். இந்தப் பாட்டியின் பூர்வீகமும் அர்ஜென்டினாதானாம். இதனால்தான் மெஸ்ஸி பெயரை அவர் பயன்படுத்தியுள்ளார்.. பாட்டியின் சமயோசிதத்தால் அவரும், அவரது குடும்பத்தினரும் உயிரோடு தப்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்