என்னாது.. செத்துப்போன தாத்தா, பாட்டி கனவுல வர்றாங்களா? அப்போ இதெல்லாம் நடக்கும்!

Jan 09, 2024,05:59 PM IST

சென்னை: கனவுகள் என்பது ஆழ்மன நினைவுகளின் வெளிப்பாடு என அறிவியல் சொல்கிறது. ஆனால் தூங்கும் போது நாம் காணும் கனவுகள் நம்முடைய வாழ்க்கையுடன் தொடர்புடையது, இவற்றில் ஒரு குறிப்பிட்ட அர்த்தங்கள் உள்ளது என கனவு சாஸ்திரம் சொல்கிறது.


மாலை 6.30 மணி துவங்கி மறுநாள் காலை 6 மணி வரை நாம் காணும் கனவுகள் அனைத்திற்கும் பலன்கள் உண்டு என சொல்லப்படுகிறது. அதிகாலையில் 03.30 மணி முதல் 6 மணி வரையிலா நாம் காணும் கனவுகள் மட்டுமே உடனே பலிக்கும் என சொல்லப்படுகிறது.




நாம் உறங்கும் போது 10 முதல் 20 கனவுகள் வரை காண்பதாக சொல்லப்படுகிறது. இவற்றில் அனைத்து கனவுகளும் நாம் கண் விழித்த பிறகு நினைவில் இருப்பது கிடையாது. குறிப்பிட்ட சில கனவுகள் மட்டுமே நாம் கண் விழித்த பிறகும் நினைவில் இருக்கும். அப்படி நினைவில் இருக்கும் கனவுகளுக்கு மட்டுமே பலன் இருக்கும்.  அப்படி நம்முடைய கனவில் இறந்து போன நம்முடைய முன்னோர்கள் அடிக்கடி வந்தால் அதற்கு என்ன பலன் என்பதை வாங்க தெரிஞ்சுக்கலாம்.


இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன் :




* இறந்த போன நம்முடைய முன்னோர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரப் போகிறது என்று அர்த்தம். அதோடு நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்ற அர்த்தம்.


* இறந்தவர்கள் கனவில் நம்மை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் அனைத்து விதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்க போகிறது என அர்த்தம்.


* இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயர், புகழ் கிடைக்க போகிறது என்று அர்த்தம்.


* நமக்கு தெரிந்த, பழக்கமான யாரோ ஒருவர் இறந்து போவது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.


* இறந்தவர்கள் அழுவது போல் கனவு கண்டால் துன்பம் வரப்போவதை குறிக்கும் எச்சரிகையாகும். 


* இறந்து போன தாய் அல்லது தந்தை கனவில் கண்டால் வரப் போகும் ஆபத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட வந்துள்ளார் என்று அர்த்தம்.


* இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் நெருக்கடியான சூழலில் உங்களுக்கு உதவ சிலர் முன்வருவார்கள் என்று அர்த்தம். 


* இறந்து போனவர்கள் கனவில் வந்து உங்களை கூப்பிடுவது போல் கனவு கண்டால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.


* நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் பெருகும் என்று அர்த்தம்.

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்