Loksabha Elections 2024: லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா?.. விஜயகாந்த் மகன்.. பரபரக்கும் தேமுதிக!

Feb 05, 2024,08:35 PM IST

சென்னை: லோக்சபா தேர்தலில் எந்தக் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று எதிர்பார்பார்ப்பு நிலவி வரும் நிலையில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தேமுதிகவினர் மத்தியில் நிலவி வருகிறது. 


லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இதற்காக பல்வேறு கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரை தங்களுக்குள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மற்றபடி கூட்டணி தொடர்பாகவோ, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை.


லோக்சபா தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியல் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தேமுதிக பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்காக மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  அதிமுக தரப்பிலும் பேசியுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.




ஒன்று, இரண்டு என மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை. நான்கு லோக்சபா தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் யார் தருகிறார்களோ அவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்பதாக தேமுதிக தீர்மானமாக உள்ளது. 


இந்த நிலையில் இன்னொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, லோக்சபா தேர்தலில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அந்த தகவல் கூறுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் மைத்துனர் எல் கே சுதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் தற்போது சுதீஷுக்கு ராஜ்யசபா பதவியைக் கொடுத்து விட்டு, விஜய பிரபாகரனை கள்ளக்குறிச்சி அல்லது வேறு தொகுதியில் போட்டியிட வைக்கலாம் என்று தேமுதிக மேலிடம் சிந்தித்து வருகிறதாம். 


விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு விஜய பிரபாகரன் தான் தந்தை செய்த நலதிட்ட பணிகளை மேற்கொள்ள போவதாக அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் தினமும் தன் தந்தையைப் போன்றே அன்னதானமும் செய்து வருகிறார். கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு திரண்ட மக்கள் கூட்டம் தங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விஜயகாந்த் குடும்பத்தினர் உள்ளனர்.


விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாபத்தால் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேமுதிகவும் உள்ளது. முன்னதாக முன்பு ஒருமுறை அளித்த பேட்டியின்போது பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், தான் லோக்சபா தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை. சட்டமன்றத் தேர்தல் நோக்கியே என் பணி இருக்கும் என தெரிவித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


சேலம், விருதுநகர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட  சில தொகுதிகளை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக தேமுதிக பட்டியலிட்டு வைத்துள்ளது. அதிலிருந்து தாங்கள் விரும்பும் தொகுதிகளைக் தரும் கட்சியுடன் கூட்டணி வைக்க தேமுதிக முடிவெடுக்கும் என்று தெரிகிறது. 7ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்குப் பின்னர் ஒரு தெளிவான தகவல் கிடைக்கலாம் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்