Is it?.. இதுதான் திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடா.. சூடாக வலம் வரும் லிஸ்ட்!

Feb 26, 2024,06:47 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடத் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வலம் வருகிறது. திமுக ஆதரவானவர்களே இதுதொடர்பான லிஸ்ட் ஒன்றை பரப்பி வருகின்றனர்.


தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு வேகமாக நடந்து வருகிறது. இதுவரை 2 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கப்பட்டு விட்டது. மற்ற கட்சிகளுக்கும் இன்னும் ஒரு வாரத்தில், தொகுதிப் பங்கீட்டை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது.




இந்த நிலையில் ஒரு லிஸ்ட் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல.. அதேசமயம், இப்படித்தான் திமுகவின் ஒதுக்கீடு இருக்கப் போவதாக அதை பரப்பி வருபவர்கள் கூறுகின்றனர். திமுகவினரே இதை பரப்புவதால் இப்படித்தான் லிஸ்ட் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


இதுதான் இறுதிப் பட்டியலா?


இந்த லிஸ்ட் படி பார்த்தால் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. அதாவது புதுச்சேரி உள்பட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுமாம். தமிழ்நாட்டில் கடந்த முறையைப் போலவே இந்த முறையும் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை 8 சீட்தான் கிடைக்குமாம். கடந்த முறை 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தேனியில் காங்கிரஸ் தோற்றுப் போனது. இதனால் இந்தமுறை அதற்கான தொகுதிகள் 8 ஆக குறைந்து விட்டதாக இந்த லிஸ்ட் கூறுகிறது. காங்கிரஸ் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் தொகுதிகள் - அரக்கோணம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாமக்கல், பொள்ளாச்சி, விருதுநகர், கன்னியாகுமரி.




விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 (திருவள்ளூர், சிதம்பரம்), இந்திய கம்யூனிஸ்ட் (திருப்பூர், நாகப்பட்டனம்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலா 2 சீட் (வட சென்னை, மதுரை) தரப்படுமாம். கடந்த முறையும் இதே அளவில்தான் இவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. மதிமுகவுக்கு 1 சீட்  (திருச்சி) கிடைக்குமாம். கூடவே ஒரு ராஜ்யசபா சீட் தரப்படுகிறதாம். மக்கள் நீதி மய்யம் புதிதாக கூட்டணியில் இணைகிறது. அக்கட்சிக்கு ஒரு லோக்சபா சீட்டும் (கோவை), ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படுகிறதாம். இதுதவிர மனிதநேய மக்கள் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படுமாம். 


கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், மனிதநேய மக்கள் கட்சியும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனவாம்.

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்