உலகின் மிகப் பெரிய வைரத்திற்கு சொந்தக்காரியானாரா தமன்னா ?

Jul 27, 2023,09:47 AM IST
சென்னை : உலகின் 5வது மிகப் பெரிய வைர மோதிரத்திற்கு சொந்தக்காரி ஆக நடிகை தமன்னா மாறி உள்ளதாக தகவல் ஒன்று மீடியாக்களில் கடந்த 2 நாட்களாக தீயாய் பரவி வருகிறது.

இது உண்மையா இல்லை வதந்தியா என்பது குறித்து தெரியாமல் இருந்து வந்தது. ஆனால்  இதற்கு தமன்னாவே தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் தமன்னா. தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த தமன்னா, தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும் இணைந்து நடித்து விட்டார். திருமணத்திற்கு பிறகும் பிஸியாக நடித்து வரும் நடிகைகளில் தமன்னாவும் ஒருவர்.



தமன்னா நடித்த Lust Stories 2 ஆந்திராலஜி வெப் சீரிஸ் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் பளபளவென மின்னும் மிகப் பெரிய வைரத்துடன் போஸ் கொடுத்து தமன்னா வெளியிட்டுள்ள போட்டோ தான் தற்போது ஒட்டுமொத்த திரையுலகிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.  செம வைரலான இந்த போட்டோவிற்கு பின்னால் உள்ள ரகசியத்தை தற்போது தமன்னா ஓப்பனாக வெளிப்படுத்தி உள்ளார்.

முகத்தில் பாதியை மறைக்கும் அளவிற்கு பெரிதாக இருக்கும் வைர மோதிரத்துடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தமன்னா வெளியிட்டதுமே பலரும் இந்த வைர மோதிரம் பற்றி ஆர்வமாக கேட்க துவங்கி விட்டனர். பலரும் தவறாக புரிந்து கொண்டு கேள்வி எழுப்பியதால் அது பற்றி தெளிபடுத்த உண்மையை சொல்லி உள்ளார் தமன்னா. இது பாட்டில் ஓப்பனருக்காக நடத்தப்பட்ட போட்டோஷூட்டிற்காக எடுக்கப்பட்ட படம். இது உண்மையான வைரம் கிடையாது என சொல்லி உள்ளார். 

ஆனால் உலகின் ஐந்தாவது பெரிய வைரத்திற்கு தமன்னா சொந்தக்காரி என்பது ஒரு வகையில் உண்மை தகவல் தான். 2019 ம் ஆண்டு, சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் சிரஞ்ஜீவிக்கு ஜோடியாக நடித்து முடித்த போது ராம் சரணின் மனைவி உபாசனா மோதிரம் ஒன்றை தமன்னாவிற்கு பரிசாக அளித்தார். இது உலகின் ஐந்தாவது மிகப் பெரிய வைரமாகும். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இந்த தகவல் தான் தற்போது கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு பரபரப்பாகி பேசப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

news

மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை சென்னை வருகிறார்..யாரை எல்லாம் சந்திக்க திட்டம்?

news

தேசியவாதியான ஐயா குமரி ஆனந்தன் மறைவு தமிழகத்துக்கும் இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு: அண்ணாமலை

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்