"பிரம்பைப் பிடிங்க.. படிக்கலைன்னா அடிங்க".. மதுரை பெற்றோர் செய்த செயல் சரியா?

Jan 30, 2023,12:41 PM IST
மதுரை: தங்களது மகனை பள்ளியில் சேர்க்கச் சென்ற பெற்றோர் கூடவே பிரம்பு ஒன்றை ஆசிரியரிடம் கொடுத்து, பிள்ளை சரியாக படிக்காவிட்டால் அடிச்சுப் படிக்க வைங்க என்று கூறிய செயல் விவாதங்களை எழுப்பியுள்ளது. பெற்றோரின் செயல் தவறு என்று பலரும் கருத்து கூறுகின்றனர்.



பிள்ளைகளை, ஆசிரியர்கள் திட்டினாலே ஆச்சா போச்சா என ஆர்ப்பாட்டம் செய்யும் பெற்றோர்கள் மத்தியில், மதுரையைச் சேர்ந்த பெற்றோர் ஒருவர், தனது "மகன் படிக்கலனா அடிச்சி பாடம் சொல்லி கொடுங்க" என ஆசிரியரிடம் பிரம்பை கொடுத்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

முன்பெல்லாம் ஆசிரியர்களைக் கண்டாலே மாணவர்கள் நடுங்குவார்கள். காரணம், சேட்டை செய்தால் அல்லது பள்ளிக்கு வராமல் டிமிக்கி அடித்தால் அல்லது சரியாக படிக்காவிட்டால் அடி வெளுத்து விடுவார்கள் ஆசிரியர்கள். மைதானத்தை சுற்றி வர வேண்டும், கையில் பிரம்படி, புட்டத்தில் பிரம்படி, வெயிலில் மணலில் முட்டி போட வேண்டும்..இப்படி பல விதமான ட்ரீட்மென்ட்கள் பள்ளியில் கிடைக்கும். இதற்குப் பயந்து மாணவர்கள் ஒழுங்கை கடைப்பிடித்த காலம் அது.

90ஸ் கிட்ஸ் காலம் வரைதான் இந்த அடி உதையெல்லாம் அமலில் இருந்தது. நாங்கெல்லாம் ஆசிரியர்களிடம் வாங்காத அடியா என சொல்வது போல் சில மாணவர்களுக்கு நாள் தொடங்குவதும் அடியில்தான், நாள் முடிவதும் அடியில்தான் என சொல்லலாம். "எவ்வளவு அடிவாங்கினாலும் சத்தம் வெளிய வராது" என் சொல்வது போல் தாறுமாறாக அடிவாங்கினாலும் "உஸ்" என அடுத்த நொடியே உதறி தள்ளிவிடுவார்கள்.

ஆசிரியர்களிடம் அடிவாங்குவதை, பட்டம் வாங்குவது போல் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ளும் 90ஸ் கிட்ஸ்சுக்கு அப்படியே தலைகீழாக 2k கிட்ஸ் உள்ளனர். "ஓய்" என ஆசிரியர்கள் அதட்டினாலே ஓப்பாரி வைக்கும் 2k கிட்ஸ் மாணவர்கள், அடுத்தநாளே தங்களது பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பஞ்சாயத்து வைத்து விடுகின்றனர்.

மாணவர்கள் தான் இப்படி என்றல், பெற்றோர்கள் ஒரு படி மேலே சென்று ஏன் என்னோட பிள்ளையை அடிக்கிறிங்க?, திட்டுறீங்க? என பள்ளி நிர்வாகத்திடம் ஆர்ப்பாட்டம் செய்துவிடுகின்றனர். பெற்றோரின் இந்த செயலால் மாணவர்களுக்கு, பள்ளியில் நாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் வந்துவிடுகிறது.

இதனால் இந்த அடி உதைக்கு அரசு தடை போட்டு விட்டது. மாணவர்களை அடிக்கவே கூடாது என்று உத்தரவே உள்ளது. கடுமையாக திட்டுவதும் கூட தவிர்க்கப்பட வேண்டியதாக ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாறாக, மாணவர்களை தட்டிக் கொடுத்து அவர்களைத் திருத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த நிலையில்தான், மதுரையைச் சேர்ந்த சங்கரபாண்டியன் - தமிழரசி தம்பதியினர் தங்களது 4 வயது மகனை புதிதாக பள்ளியில் சேர்க்க சென்றுள்ளனர். பொதுவாக பெற்றோர்கள் தனது மகனை பள்ளியில் சேர்க்கும்போது நல்ல பாத்துக்கோங்க, அடிக்காதிங்க என பாத்து பாத்து பள்ளியில் சொல்லி விட்டு வருவார்கள். ஆனால் சங்கரபாண்டியன் - தமிழரசி தம்பதியோ தங்களது மகனை பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, கையில் 4 அடி உயர பிரம்பையும் கொண்டு சென்று ஆசிரியரிடம் கொடுத்து, ஒரு உறுதிமொழிக் கடிதத்தையும் ஒப்படைத்தனர்.

அந்த உறுதிமொழி கடிதத்தில், த��்களது மகன் தவறு செய்தால் கண்டிப்புடன் அடித்து பாடம் சொல்லித் தர வேண்டும் என்று  கூறியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிலர் இதைப் பாராட்ட பலர் விமர்சித்துள்ளனர். மாணவர்கள் தங்களின் வாழ்க்கையில் படி படியாக முன்னேற வேண்டுமானால் முதல் படியாக, பாடம் கற்று தரும் ஆசிரியரின் 'அடியே' உதவும் என இதற்கு சிலர் நியாயம் கற்பித்தாலும், இது தவறான முன்னுதாரணமாகி விடும்.. என்றும் வாதிடுகின்றனர்.

வாசகர்களே.. நீங்க என்ன நினைக்கிறீங்க.. உங்க கருத்துக்களை சொல்லுங்களேன்.

சமீபத்திய செய்திகள்

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்