சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

Feb 22, 2025,07:06 PM IST
சென்னை: நாம் தமிழர் கட்சியின் அனல் பறக்கும் தலைவர்களில் ஒருவராக விளங்கி  வரும் காளியம்மாள் தனது கட்சிப் பொறுப்புகளை துறந்துள்ளாரா, கட்சியை விட்டு விலகப் போகிறாரா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ்தான் இத்தனை கேள்விகளையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் காளியம்மாள். சமீப காலமாக அவரது செயல்பாடுகள் முடங்கிப் போயுள்ளன. கட்சி சார்பாக அவர் பெரிதாக எதிலும் பங்கேற்பதில்லை. அவர் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிசிறு என்று விமர்சித்த விவகாரம் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில் அது காளியம்மாளுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.



இருப்பினும் வெளிப்படையாக எந்த அதிருப்தியையும் காளியம்மாள் காட்டிக் கொள்ளவில்லை. கருத்தும் கூறவில்லை. அமைதியாக இருந்து வருகிறார். அவர் கட்சியிலிருந்து விலகி விஜய் கட்சியில் இணையப் போகிறார் என்றும், இல்லை இல்லை திமுகவில் சேரப் போகிறார் என்றும் அவ்வப்போது தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.

அதாவது தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் உறவுகள் சங்கமம் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மார்ச் 2ம் தேதி இது நடைபெறவுள்ளது. இதில் நீதிபதி, பல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். அதேபோல அரசியல் கட்சிகள் சார்பில் திமுகவிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பாளர் கான்ன்ஸ்டைன் ரவீந்திரன், மாநில திமுக மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின், காங்கிரஸலிருந்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ, எம்எல்ஏ தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

மீனவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. இதில்தான் காளியம்மாளும் பங்கேற்கிறார். ஆனால் அவரது பெயருக்குக் கீழே வெறுமனே சமூக செயற்பாட்டாளர் என்று மட்டும் போடப்பட்டுள்ளது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு கட்சிப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளபோது,  காளியம்மாள் மட்டும் ஏன் அதைப் போடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இது அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி என்பதால் கட்சிப் பெயர் போடவில்லை என்று காளியம்மாள் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் இதுவும் நம்பும்படியாக இல்லை. எனவே அவர் கட்சியை விட்டு விலகி விட்டாரா அல்லது கட்சி பொறுப்புகளிலிருந்து விலகி விட்டாரா என்ற கேள்விகள் எழுவுந்துள்ளன.

அக்கா அக்கா என்று சொந்தக் கட்சியினராலும், ஏன் மாற்றுக் கட்சியினரும் கூட பாசத்துடன் பார்க்கப்படுபவர்தான் காளியம்மாள். காரணம், இவரது அனல் பறக்கும் பேச்சும், அழுத்தம் திருத்தமான விவாதத் திறமையும்தான். அப்படிப்பட்டவர் நாம் தமிழர் கட்சியில் ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்பது ஏற்கனவே அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் ஒரு வே்ளை கட்சியை விட்டு விலகினால் கட்சியின் இமேஜ் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!

news

2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!

news

தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!

news

பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!

news

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!

news

அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?

news

தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்

news

சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்