Walking போகும்போது செருப்பு போடாம நடக்கலாமா?.. அப்படி நடந்தா ஏதாவது பிரச்சினை வருமா!

Jul 30, 2024,03:15 PM IST

  காயத்ரி கிருஷாந்த்


இன்று சர்வதேச நட்பு தினமாமே.. அப்படீன்னா செருப்பைப் பத்தி பேசாம இருக்க முடியுமாங்க.. நண்பனுக்கும், செருப்புக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு உங்க மனசு கேட்பது புரியுது.. மனிதனை விட்டுப் பிரியாமல் இருக்கும் உற்ற தோழன்தானே இந்த காலணி.. வீட்டுக்குள்ளேயே கூட பலர் செருப்பை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளியில் போவதாக இருந்தால் செருப்பு இல்லாமல் போகவே மாட்டோம்.. அப்படீன்னா மனிதனுக்கு உற்ற நண்பன் செருப்பு என்பது சரிதானே!


நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ... என்ற பாடலே நினைவுக்கு வருகிறது இந்த செருப்பைப் பார்க்கும் பொழுதெல்லாம்.. செருப்பு மனிதனின் உற்ற நண்பனாக மாறி விட்ட ஒன்று. இந்த நண்பனை மறுக்கவும் முடியவில்லை... விட்டு விலகவும் முடியவில்லை என்ற நிலையிலேயே நாம் இன்று இருக்கிறோம்.




நமது பாதுகாப்பிற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்தும் இன்று நாம் யார் என்பதை நிர்ணயிக்கும் அம்சமாக மாறி உள்ளது... நம் தேவைக்காக பயன்படுத்திய பொருட்கள் நம்மை அடிமையாக்கி அதல பாதாளத்தில் விழ வைத்து சிரித்துக் கொண்டிருக்கிறது. காலணி பயன்படுத்துவது எந்தளவுக்கு நன்மையோ அதே அளவுக்கு வெறும் காலால் நடப்பது சிறந்தது என்ற வாதமும் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.


காலணி அணியாமல் நடப்பதே நல்லது என்று பலரும் கூற ஆரம்பித்துள்ளனர். ஆனால் அப்படி நடக்கக் கூடாது, அது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று எதிர்த் தரப்பு கூறுகிறது. அதுகுறித்து இப்போது சற்று விரிவாகப் பார்ப்போமா. முதலில் காலணிகளின் ஆதரவு கருத்தைப் பார்க்கலாம்.


நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி அடைகிறது:




"காலனை கூட காலம் தாழ்த்த செய்யலாம் காலணிகள் அணிவதை தவிர்த்தால்" .. வெறும் காலால் நடப்பதால் நம் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி அடைகிறது. வெறும் காலில் நடப்பதால் உணர்வுகள் மூட்டு இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளுக்கு கடத்தப்பட்டு தசைகள் வலுவடைகிறது. வெறுங்காலால் நடப்பதால் பூமிக்கும் நமக்கும் இடையில் சக்தி பரிமாற்றம் ஏற்படுகிறது இதனைத் தான் ஆங்கிலத்தில் எர்திங் என்கிறோம். எலும்பு கல்லீரல் மூளையை பாதிக்கக்கூடிய நாள்பட்ட நோய்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. ரத்த ஓட்டம் சீராகி முகப்பொலிவு பெறும் .இதய நோய்கள் முதற்கொண்டு வராமல் தடுக்கப்படுகிறது.


மறைந்த எம்.எப். உசைன் மிகச்சிறந்த ஓவியர். அவர் தனது வாழ்நாளில் காலணிகளை தவிர்த்து வந்தார். அதற்கான காரணத்தை அவரது நேர்காணலில் அழகாக கூறியுள்ளார்.  குறைவான உணவும் வெறும் காலுடன் நடப்பதுமே தன் சுறுசுறுப்புக்கான காரணம் என்பதை தெளிவாக கூறியுள்ளார் உசேன். மேலும் உளவியல் ரீதியாக காலணியின் தரத்தை பொறுத்து நம் தரம் மதிப்பிடப்படுவதால் அதை தவிர்த்து விட்டதாகவும் என்னை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்னைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்றும் அழகாக சொல்லி உள்ளார்".


அதேபோலத்தான் சத்குருவும் வெறும் காலுடன் நடப்பதை பற்றி தெளிவாக கூறியுள்ளார். பூமியிலிருந்து வந்த நாம் பூமியோடு நேரடி தொடர்பில் இருக்கும் பொழுது பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதே தெளிவாக கூறியுள்ளார். தனால் நமது அறிவுத்திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறார்.


வெறும் காலில் நடப்பதால் பல ஆபத்துகள்:


மறுபக்கம் வெறும் காலில் நடப்பதால் பல ஆபத்துகள் உள்ளதாக மருத்துவர்கள் பலரும் கூறுகிறார்கள். வெறும் காலில் நடக்கலாம், ஆனால் நாம் நடக்கும் பரப்பு சுத்தமாகவும் எந்தவித இடையூறு ஏற்படுத்தாத வண்ணமும் இருப்பதை உறுதி செய்வதை அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மண் கல், முள் ஏதேனும் உள்ள பரப்பில் நடந்தால் புண்களோ காயங்களோ, தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு பாதத்தில் காயம் ஏற்பட்டு விட்டால் அது குணமாவது கடினம், புண் புரையோடிப் போகும் அபாயமும் உள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள். எனவே பொது இடங்களில் காலணிகளை பரிந்துரைக்கிறார்கள். 


நீரழிவு நோயாளிகளுக்கு வெறுங்காலில் நடப்பது கனவு தான். புண்களோ தொற்றுகளோ ஏற்பட்டால் ஆராத ரணமாக மாற வாய்ப்புள்ளது. எனவே இயற்கையோடு இணைந்து வாழ்ந்தாலும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்வதும் முக்கியம்.


சரி இதுகுறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்.. சென்னை பிரதீப் நர்சிங் ஹோம் மருத்துவமனையின் டாக்டர் பிரதீப் ராஜ் MD.(Paed)Hon. Ph.D., Paediatrician & General Physician.. நம்மிடம் இதுகுறித்து பகிர்ந்து கொண்டது இதுதான்:


வெறும் காலில் நடப்பது என்பதை போடியாட்ரிஸ்ட்டுகள் (Podiatrists) பரிந்துரை செய்து கொண்டிருக்கின்றனர்.  வெறும் காலால் நடப்பதால் பல நன்மைகள் இருக்கின்றது. வெறும் காலால்  நடக்கும் பொழுதும்  காலில் இருந்து சமிக்ஞைகள் மூளைக்கு செல்வதால் நம் உடல் சமநிலை மேம்படுத்தப்படும் என்று அறிவுறுத்துகின்றனர். நன்றாக நடக்க முடியாதவர்களுக்கு வெறும் காலில் நடக்க பயிற்சி கொடுக்கும் பொழுது சமநிலை மேம்படும் என்று கூறுகின்றனர். 


கால்களில் 19 தசைகள்:




பொதுவாகவே நம் கால்களில் 19 தசைகள் இருக்கின்றது. நாம் ஷூ அணியும் பொழுது நாம் நடக்கும் முறை மாறும். சாதாரணமாக ஓடும் பொழுது நாம் கால் விரல்களை அழுத்தி தான் ஓட வேண்டும் ஆனால் ஷூ அணிந்து விட்டால் குதிங்கால்களில் அழுத்தம் தான் அதிகரிக்கும். விரல்களுக்கு நடுவே இடைவெளி இருந்தால் மட்டுமே தசை வலுவடைந்து கால் வலிமை பெறும். ஷூ அணிந்திருந்தால் விரல்களின் இடைவெளி இன்றி தசைகள் வேலை செய்வதை நிறுத்திக் கொள்ளும். இதன் விளைவாக கால்களின் நிலையிலும் நம் நிற்கும் நிலையும் மாறுகிறது. வெறும் கால்களில் நடக்கும் பொழுது தசை வலுவடைவதால் நன்றாக நிற்கும் நிலை கிடைக்கிறது. பாதம் தனது வேலையை செய்வதால் முட்டிக்கும் இடுப்புக்கும் வேலை குறைவாக இருப்பதால் நாம் நிற்கும் நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 


நரம்புகள் நல்ல வேலை செய்வதால் தசைகள் வலுவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கும் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் உடலில் அனைத்து பாகங்களும் நன்றாக வேலை செய்யும். எர்த்திங் என்கிற கருத்தை போடியாட்ரிட்ஸ் பரிந்துரை செய்கிறார்கள். எப்படி ஒரு கட்டுமானத்திற்கு எர்திங் முக்கியமோ அதுபோல உடம்பில்  இருந்து வெளியேறக்கூடிய மின்னோட்டமும் பூமியிலிருந்து வரக்கூடிய மின்னோட்டமும் சேர்ந்து நேர்மறை விளைவுகளை உருவாக்குவதால் , நம் உடலில் ஹார்மோன் பிரச்சினைகள் தீர வாய்ப்பு இருக்கிறது, கார்டிசல் என்ற ஹார்மோன் அளவு குறைகிறது, இதனால் மன அழுத்தம் குறைகிறது. இன்சோம்னியா என்று அழைக்கப்படும் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கு வெறும் காலால் நடப்பது பரிந்துரைக்கப்படுகிறது. மன அழுத்தம் குறைவதால் கூர்ந்து கவனிக்கும் தன்மை அதிகரிக்கிறது. 


கால் ஆணி வர வாய்ப்பு:




இதனால் பாதிப்பு என்று எடுத்துக் கொண்டால் மருத்துவரின் பரிந்துரை என்னவென்றால்,  நடக்கக்கூடிய பரப்பில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றால் வெறும் காலம் நடப்பது என்பது பரிந்துரைக்கப்படக்கூடிய ஒன்றுதான்.  ஆனால் சில பேருக்கு கான்ஃபுட் என்று அழைக்கக்கூடிய கால் ஆணி வர வாய்ப்பு இருக்கிறது. தொற்றுகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது. புல்வெளியில் நடந்தால் கூட தொற்றுகள் வர வாய்ப்பு இருக்கிறது புல்வெளியில் ஆங்கிலோஸ்ட்டோமா என்று அழைக்கப்படக்கூடிய புழு வகைகள் சுற்றுப்புறத்தில் பரவி தான் இருக்கிறது. அதனை வெறும் காலால் மிதிக்கும் பொழுது நம் உடலில்  ரத்தத்திற்குள் நுழைந்து, நுரையீரலுக்குள் சென்று, குடல்களுக்குள் சென்று,  புழுக்கள் குடலில் உருவாக காரணமாக இருக்கிறது. 


செல்லுலைடிஸ் (Cellulitis) என்று சொல்லப்படக்கூடிய பாக்டீரியா தொற்று  இதனால் மிகவும் பாதிப்படையக் கூடியது நீரழிவு நோயாளிகள் தான். இவர்கள் காலில் சிறு புண்கள் இருந்தாலும் இந்த ஃபேக்டீரியா தொற்றானது அவர்கள் காலை ஆராத ரணமாக மாற்றுவதற்கு வாய்ப்புள்ளது‌. எனவே மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு வெறும் காலால் நடப்பதை பரிந்துரை செய்வதில்லை.

பூஞ்சை தொற்று ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. சுற்றுப்புறத்தில் உள்ள வைரஸ் கிருமியால் எச் பி வி என்ற தொற்று வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. 


தொற்றுகள் ஏற்படக்கூடிய அபாயம் ஒன்று தான் வெறும் காலால் நடப்பதால் உள்ள பயமே தவிர.. நடக்கக்கூடிய பரப்பு சீராகவும், சுத்தமாகவும் இருந்தால் மருத்துவர் தயக்கம் இன்றி வெறும் காலால் நடக்கலாம் என்று பரிந்துரைக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்