சென்னை : பிளவுபட்ட நிலையில் இருக்கும் அதிமுக வரும் சட்டசபைத் தேர்தலை வலுவாக சந்திக்குமா என்ற ஐயப்பாடு தொண்டர்களிடையே நிலவுகிறது. கட்சியினர் மனதில் தற்போது எழுந்து வரும் ஒரே கோரிக்கை.. அனைத்துத் தலைவர்களும் இணைந்து திமுகவுக்கு வலுவான எதிர்ப்பைத் தர வேண்டும் என்பதே என்று கட்சியின் நீண்ட கால விசுவாசிகள் ஏக்கத்துடன் கூறுகிறார்கள்.
அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அக்கட்சியில் நடந்த குழப்பங்கள், மாற்றங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். கட்சி, சின்னம் யாருக்கு என இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இடையே கடும் போட்டி நடந்து, கோர்ட் வரை சென்று தீர்வு கண்டார்கள்.
தற்போதைய நிலவரப்படி, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் சட்டப்படியாக உள்ளது. இபிஎஸ் அதிமுக.,வின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை நடத்தி வருகிறார்க. ஓபிஎஸ், அடுத்தடுத்த பல சரிவுகளுக்கு பிறகு சத்தம் காட்டாமல் இருந்து வருகிறார். கட்சி இரு அணிகளாக பிரிந்து இருப்பதில் தொண்டர்கள் உள்ளிட்ட பலருக்கும் வருத்தம். தான். இதனால் மீண்டும் இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும். பழைய பலத்துடன் கட்சி ஃபார்முக்கு திரும்பி, மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது தான் அதிமுக.,வின் தலைமை முதல் கடைக் கோடி தொண்டன் வரை அனைவரின் விருப்பமும்.
இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என சசிகலாவும் பலமுறை கூறி வருகிறார். ஆனால் சசிகலாவை சேர்க்க கூடாது என ஒரு தரப்பும், மீண்டும் ஒன்று சேர்ந்து செயல்பட ஓபிஎஸ் தரப்பில் பல தரப்பட்ட கண்டிஷன்கள் போடப்படுவதும் அதிமுக.,வில் இணைவு என்பது இல்லாமல் இழுத்துக் கொண்டே போகிறது. அதிமுக.,விற்குள் நடக்கும் இந்த குழப்பத்தால் கட்சி பலம் இழந்து காணப்படுவதாக ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது. இதை நிலை நீடித்தால் கட்சியின் நிலை என்ன ஆகும் என்பதை விட, 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது கனவாகவே போய் விடுமே என்ற பயமும் அனைவரின் மனதிலும் உள்ளது.
இதற்கிடையில் விஜய் வேறு கட்சி துவக்கி விட்டார். திமுக.,வை எதிரி என்று சொன்னவர், அதிமுக.,வுடன் கூட்டணி கிடையாது என்றும் சொல்லி விட்டார். 2026 தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனி அணியாக போட்டியிடுவது உறுதியாகி விட்டது. அப்படி அவர் போட்டியிட்டால், கண்டிப்பாக அதிமுக.,வின் ஓட்டுக்கள் தான் அதிகம் பிரிய வாய்ப்புள்ளது. இது கட்சிக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தும்.
இதை உணர்ந்த ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளரும், செய்தி தொடர்பாளருமான மருது அழகுராஜ், தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் போஸ்ட் ஒன்று போட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "கவலைக்கிடமாய் கிடக்கும் அதிமுகவுக்கான ஒரே அவசர சிகிச்சை அனைவரும் ஒன்றிணைவது மட்டும் தான். அது கை கூடாது போனால்.. அதிமுக மதிமுகவாகும்..தவெக அதிமுகவாக மாறும்...என்ன நாஞ் சொல்றது..." என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு ஆதரவாக சிலரும், இவரை விமர்சித்து சிலரும் கமெண்ட் செய்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக.,வில் இருந்து வரும் மூத்த உறுப்பினரான மருது அழகுராஜ் இப்படி ஒரு பதிவு போட்டுள்ளார் என்றால், அதிமுக.,விற்கு விஜய் கட்சியால் பாதிப்பு ஏற்படும் என்ற பயம் கட்சிக்குள் நிலவுகிறது என்பதையே காட்டுகிறது. விஜய் ஏதாவது செய்து இன்னும் தனது கட்சி பலத்தை அதிகப்படுத்துவதற்கு முன்பாக தாங்கள் முந்திக் கொண்டு, ஏதாவது செய்து விட வேண்டும் என பதற்றம் அதிமுக.,வினர் இடையே இருப்பதை இது காட்டுகிறது.
ஒருவேளை இவர் சொல்வதை போல் அதிமுக இன்னும் பலம் இழந்து போனால் அது 2026 தேர்தலில் தவெக மற்றும் திமுக.,வின் பலத்தை அதிகரிக்க செய்து விடும். அதோடு அதிமுக ஓரங்கட்டப்பட்டு, கட்சியின் அரசியல் எதிர்காலமே கேள்விக்குறி ஆகி விடும். எதிர்கால அரசியல் திமுக - தவெக அல்லது திமுக - பாஜக என்று மாறி விடக் கூடிய அபாயமும் அதிகமாகவே உள்ளது.
எம்ஜிஆரும், அவருக்குப் பின்னால் ஜெயலலிதாவும் எழுதிய வரலாற்றை வலுக்கட்டாயமாக, பிடிவாதமாக அழித்து வருகிறதா அதிமுக என்ற அச்சம் தொண்டர்களிடையே வலுத்து வருகிறது என்பதே உண்மை.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}