இஸ்ரேலுக்கோ, அமெரிக்காவுக்கு உதவினால்.. சவூதி உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

Oct 12, 2024,05:26 PM IST

டெஹ்ரான்:   அமெரிக்காவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ உங்களது நாடு உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று  எண்ணெய் ஏற்றுமதி செய்யும் இஸ்லாமிய நாடுகளை ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. 


அமெரிக்காவுக்கு தீவிர ஆதரவாக செயல்படும் சவூதி அரேபியா, கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குத்தான் இந்த கடும் எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளதாக கருதப்படுகிறது. ரகசிய தூதர்கள் மூலம் இந்த எச்சரிக்கையை ஈரான் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


ஈான் - இஸ்ரேல் மோதல் அனல் பறக்கிறது. ஈரான் நடத்திய அதிரடித் தாக்குதலால் அதிர்ச்சி அடைந்துள்ள இஸ்ரேல், பழிக்குப் பழி வாங்க சமயம் பார்த்துக் காத்திருக்கிறது. இஸ்ரேல் தாக்கினால் ஈரான் முழு அளவிலான போரைத் தொடங்கும், அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும், சர்வதேச அளவில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இஸ்ரேலை அமெரிக்கா சமாதானப்படுத்தி நிதானம் காக்குமாறு அடக்கி வைத்திருக்கிறது. ஆனால் இஸ்ரேல் சும்மா இருக்காது என்று எல்லோருக்கும் தெரியும்.




தாக்கக் காத்திருக்கும் இஸ்ரேல்:  ஆனால் தற்போது ஈரான் மீதான கோபத்தை பரிதாபத்துக்குரிய காஸா மீதும், லெபனான் மீதும் தொடர்ந்து காட்டி வருகிறது இஸ்ரேல். ஏற்கனவே காஸா சின்னாபின்னமாகி விட்டது. மனிதர்கள் வசிக்கே முடியாத அளவுக்கு அந்த பகுதியை நிர்மூலமாக்கி விட்டது இஸ்ரேல். ஆனாலும் அதன் போர் வெறி அடங்கவில்லை. தொடர்ந்து அப்பாவி மக்களைக் குறி வைத்துத் தாக்கி வருகிறது.


இந்த நிலையில் எல்லா வகையிலும் ஈரான் தன்னை தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தனது அபாயகரமான ஏவுகணைகளை அது ஏற்கனவே தயார் நிலையில் வைத்துள்ளது. தற்போது எண்ணெய் ஏற்றுமதி  செய்யும் இஸ்லாமிய நாடுகளுக்கு அது எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் அமெரிக்காவுக்கோ, இஸ்ரேலுக்கோ உங்களது நாடு உதவக் கூடாது. அமெரிக்க ராணுவத்திற்கோ, இஸ்ரேல் ராணுவத்திற்கோ உங்களது இடங்களைப் பயன்படுத்த அனுமதி தரக் கூடாது. மீறி உதவினால் மிகக் கடுமையான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று அது எச்சரித்துள்ளதாம்.


எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள்தான் உலக அளவில் பெரும்பாலான நாடுகளுக்கு பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை சப்ளை செய்கின்றன. OIC என்று அழைக்கப்படும் இந்த கூட்டமைப்பில் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,  ஜோர்டான் போன்ற நாடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க ஆதரவு நாடுகளாகும்.


அண்டை நாடுகளின் ஆதரவு தேவை: தற்போது ஈரானைத் தாக்க வேண்டுமானால் அதற்கு அருகாமையில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் துணை இஸ்ரேலுக்குத் தேவை. ஈரானின் அண்டை நாடுகள் யார் என்று பார்த்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்கமேனிஸ்தான், அஜர்பைஜான், ஆர்மீனியா, துருக்கி, ஈராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை உள்ளன. சற்று தொலைவில் உள்ள நாடு சவூதி அரேபியா.  இதில் தனக்கு ஆபத்தான நாடுகளாக ஈரான் பார்ப்பது சவூதி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஜோர்டான் ஆகிய நாடுகளைத்தான். இவை அமெரிக்க ராணுவத்தை, தனக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று ஈரான் சந்தேகிக்கிறது. இதனால்தான் கடும் எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.


ஈரான் நாட்டின் எண்ணெய் வளக் கட்டமைப்புகளை இஸ்ரேல் குறி வைக்குமா என்ற அச்சமும் உள்ளது. அப்படிச் செய்வதன் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியும் என்று இஸ்ரேல் கணக்குப் போடுகிறது. இதை அமெரிக்காவும் ஆதரிக்கும். காரணம், இதனால் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும். அப்படிச் செய்தால், பிற இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பாது. மாறாக அப்பாவி ஈரானியர்கள் அதிக அளவில் பலியானால், இஸ்லாமிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக மாறி விடும். அது இஸ்ரேலுக்கு ஆபத்து என்று அமெரிக்கா கணக்குப் போடுகிறதாம்.




போர் வெடித்தால் OICக்கு சிக்கல்: இதற்கிடையே, ஈரான் - இஸ்ரேல் இடையே மிகப் பெரிய போர் வெடித்தால் முதலில் பாதிக்கப்படப் போவது இந்த எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள்தான். இந்திப் பிராந்தியத்தில்தான் ஈரான் உள்ளதால் எண்ணெய் ஏற்றுமதி மிகக் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று இவை அஞ்சுகின்றன.  இந்தக் கவலை அமெரிக்காவுக்கும் உள்ளது. எனவே ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த நாடுகள் நிச்சயம் எடுக்காது என்று கருதப்படுகிறது. மேலும் ஈரானைத் தாக்கும் திட்டத்தையும்  கைவிடுமாறோ அல்லது நிறுத்தி வைக்குமாறோ அமெரிக்காவிடம் அவை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.


உண்மையில் ஜோர்டான் போன்ற நாடுகள் ஈரானின் வளர்ச்சியை விரும்பவில்லை. தங்களைத் தாண்டி ஈரான் வளர்ந்து வருவதும், இஸ்லாமிய நாடுகளின் பெரியண்ணன் போக்கை அது கடைப்பிடிப்பதையும் இவை விரும்பவில்லை. கடந்த காலத்தில், இஸ்ரேலைத் தாக்க வந்த ஈரான் ஏவுகணைகளை தாக்க தங்களது நிலப்பரப்பை இவை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் கொடுத்த சம்பவங்கள் உள்ளன. இதனால்தான் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளை ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.


முன்பை விட இப்போது ஈரான் மிகவும் பலம் வாய்ந்த ராணுவ சக்தியாக உருவெடுத்திருப்பதால் முன்பு போல ஈரானுக்கு எதிராக செயல்பட ஜோர்டான், சவூதி போன்ற நாடுகள் விரும்பாது என்று தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்