ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர்... விபத்துக்குள்ளானது.. மீட்புப் படைகள் விரைந்தன!

May 19, 2024,07:18 PM IST

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர்களில் பயணித்துக் கொண்டிருந்தனர். மொத்தம் 3 ஹெலிகாப்டர்களில் அவர்கள் சென்றனர். அப்போது கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சிகான் என்ற இடத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய நிலையில் இன்னொரு ஹெலிகாப்டர் வேகமாக கீழே வந்து மோதி விட்டதாக கூறப்படுகிறது. 




அந்த ஹெலிகாப்டரில் யார் இருந்தார்கள், அதிபர் இருந்தாரா, அவருடன் யாரெல்லாம் இருந்தார்கள் என்று தெரியவில்லை. அதிபர் இப்ராகிம் அதில்தான் இருந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு செம்பிறை மீட்புப் படையினர் விரைந்து சென்றுள்ளனர்.


இதுகுறித்து கிழக்கு அஜர்பைஜான் மாகாண .துணை ஆளுநர் அலி ஜகாரி கூறுகையில், இதுகுறித்த முழுவிவரம் என்னிடம் இல்லை. 3 ஹெலிகாப்டர்களில் இரண்டு பத்திரமாக தரையிறங்கிய நிலையில் 3வது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு நான் செல்லவுள்ளேன் என்றார்.


ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலமாக இஸ்ரேலுடன் கடுமையான மோதல் போக்கில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் மீது அது ஏவுகணைத் தாக்குதலையும் நடத்தியது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் இப்படி ஒரு செய்தி வந்துள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

வட, தென் இந்திய சினிமா இணைந்து.. பான் இந்தியா திரைப்படதை உருவாக்க வேண்டும்.. தமன்னா

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

Breakfast recipe.. வரகு பொங்கலும் தேங்காய் மல்லி சட்னியும்.. செம காம்போ.. சுப்ரீம் ஹெல்த்தி உணவு!

news

Half yearly exam: டிசம்பர் 24 டூ ஜனவரி 1.. 9 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை.. கல்வித்துறை

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

நயினார் நாகேந்திரனை தனியாக சந்தித்தது ஏன்.. வதந்தி கிளப்பக் கூடாது.. எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

அதிகம் பார்க்கும் செய்திகள்