ஈரான் நாட்டு அதிபர் தேர்தலில்.. முற்போக்காளர் மசூத் பெசெஸ்கியான் அபார வெற்றி.. புதிய அதிபராகிறார்!

Jul 06, 2024,05:34 PM IST

தெஹ்ரான்: ஈரான் நாட்டு அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், அந்நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் முற்போக்காளரும், மேற்கத்திய நாடுகளுக்கு சாதகமானவராக கருதப்படுபவருமான மசூத் பெசெஸ்கியான் வெற்றி பெற்றுள்ளார்.


தீவிரக் கருத்துடைய வலதுசாரி பிரிவைச் சேர்ந்த சயீது ஜலீலியை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் மசூத் பெசெஸ்கியன்.


ஈரான் அதிபராக இருந்து வந்தவர் இப்ராஹிம் ரைசி. இவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் கடும் மோதல் போக்கில் ஈடுபட்டு வந்தார். ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக திகழ்ந்தவர். இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் ஈரானையும் மறைமுகமாக பங்கெடுக்க வைத்தார். இந்த நிலையில் கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் ரைசி கொல்லப்பட்டார். 




இதனையடுத்து அந்நாட்டு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 40 சதவிகித வாக்குகள் பதிவானது. இதில் சீர்திருத்த கட்சி சார்பாக போட்டியிட்ட மசூத் பெசெஸ்கியன் 42.5 சதவீத வாக்குகளையும், வலதுசாரி தலைவர் சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளையும், பெற்றிருந்தனர்.


ஈரான் நாட்டின் சட்டப்படி, தேர்தலில் 50 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் முதல் இரண்டு இடங்களை பிடித்த கட்சி தலைவர்கள் 50 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளை பெற்றிருந்த நிலையில், தேர்தலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இருவருக்கும் இடையே இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது.


இந்த இரண்டாம் கட்ட தேர்தல் முடிவில் மசூத் பெசெஸ்கியன் 56 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஈரான் நாட்டின் புதிய  அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவியேற்க இருக்கிறார். 69 வயதான இவர் ஈரான் நாட்டின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். மேற்கத்திய நாடுகளுடனான உறவை சீர்படுத்த தான் முயற்சிக்கப் போவதாக மசூத் கூறியுள்ளார்.


மசூத் பல்வேறு சீர்திருத்தங்களை செய்யப் போவதாக கூறியுள்ள போதிலும் கூட அது அத்தனை சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், ஈரான் அரசில் இன்னும் தீவிரக் கருத்தாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களைத் தாண்டி எந்த அளவுக்கு மசூத்தால் செயல்பட முடியும் என்று தெரியவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

வங்கி கணக்கிற்கு இனி 4 பேர் வரை நாமினியாக நியமிக்கலாம் .. புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்

news

மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகிறார் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்.. டிச. 5ல் பதவியேற்பு

news

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்.. திடீரென கைது செய்யப்பட்டது ஏன்?.. திடுக்கிடும் தகவல்கள்!

news

சாதிவாரிக் கணக்கெடுப்பு.. தேசியத் தலைவர்கள் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

TNSTCக்கு.. 5 வருடமாக எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை.. திமுக எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்!

news

திருக்குறளின் முப்பால்களையும் மையப்படுத்தும் படம்.. இசையமைக்க டக்கென ஒத்துக் கொண்ட இளையராஜா

news

Chennai Lakes: தொடர் மழையால் மேம்பட்ட சென்னை ஏரிகளின் நீர் இருப்பு.. சூப்பர் அப்டேட்!

news

அவசர சோறு ஆபத்து.. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.. உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 04, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்