பாகிஸ்தான் பக்கம் திரும்பிய ஈரான்.. தீவிரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல்.. பரபரப்பு

Jan 17, 2024,06:36 PM IST

டெஹரான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஈரான் ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஜெய்ஷ் அல் அதில் என்ற தீவிரவாத அமைப்பின் 2 முகாம்களை தாக்கி அழித்ததாக ஈரான் கூறியுள்ளது. ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இந்த் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. 


ஈராக், சிரியாவில் இஸ்ரேலிய நிலைகளைக் குறி வைத்து ஈரான் தாக்கிய அடுத்த நாளே பாகிஸ்தான் பக்கம் அது திரும்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் செயலால் பிராந்தியத்தின் அமைதிச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.




பாகிஸ்தான் - ஈரான் எல்லைப் பகுதியில், ஜெய்ஷ் அல் அதில் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அடிக்கடி ஈரான் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதனால்தான் அவர்களின் நிலைகளைத் தாக்கி அழித்துள்ளது ஈரான்.


இந்தத் தாக்குதல் குறித்து பலுசிஸ்தான் மாகாண தகவல் துறை அமைச்சர் ஜான் அச்சகாஸி கூறுகையில், இதற்கு நிச்சயம் பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்புப் பிரிவு இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.


அதேசமயம், ஈரான் சர்வதேச விதிமுறைகளை, சட்டங்களை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டித்தக்கத்கது.  இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஈரான் வெளியுறவுத்துறை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்