வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவிலான தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மத்திய கிழக்கில் தனது படைகளை அமெரிக்கா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால் மிகப் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரானுக்கு வந்திருந்த இடத்தில் குண்டு வைத்துக் கொல்லப்பட்டார். இஸ்ரேலின் உளவுப்படைதான் இந்த படுகொலையை அரங்கேற்றியுள்ளது. மேலும் ஹமாஸ் அமைப்பின் ராணுவ தளபதியையும் இஸ்ரேலியப் படையினர் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் கொன்று விட்டனர். இந்த சம்பவங்களால் ஈரான் கடும் கொதிப்படைந்துள்ளது. ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகத்தான் ஹனியே டெஹ்ரான் வந்திருந்தார். வந்த இடத்தில் அவர் கொல்லப்பட்டிருப்பதால் ஈரான் கடும் கோபமடைந்துள்ளது.
இதனால் இஸ்ரேல் மீது போர் தொடுக்க ஈரான் ஆயத்தமாகி வருகிறது. ஈரானிலிருந்து மட்டுமல்லாமல் ஏமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பல முனைத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. இதையடுத்து அமெரிக்கா தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இஸ்ரேலைக் காப்பதற்காக முதலில் வரும் நாடு அமெரிக்காதான். இஸ்ரேல் தும்மினால் கூட உடனே ஓடி வந்து வேலை செய்ய ஆரம்பித்து விடும் அமெரிக்கா. அந்த வகையில் தற்போது ஈரான் திட்டமிட்டு வரும் தாக்குதலால் இஸ்ரேலுக்கு பாதிப்பு வந்து விடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்க ஆரம்பித்துள்ளது.
மத்திய கிழக்கில் தனது படை பலத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கூடுதல் போர்க் கப்பல்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. மேலும் போர் விமானங்களின் எண்ணிக்கையையும் அது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காகவே படையினரை அதிகரிப்பதாக அமெரிக்கா கூறினாலும் கூட இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்தால் அதை முறியடிக்கவே அமெரிக்கா தனது படையை குவிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ள யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க் கப்பலுக்குப் பதில் யுஎஸ்எஸ் ஆப்ரகாம் லிங்கன் போர்க்கப்பலை அங்கு அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. மேலும் ஏவுகணைகளையும் அதிக அளவில் அமெரிககா அனுப்பி வைத்து வருகிறது. அதேபோல அதி நவீன போர் விமானங்களையும் அனுப்பி வைத்து வருகிறது.
ஈரான் கோபம், இஸ்ரேல் படுகொலைகள், அமெரிக்காவின் படைக் குவிப்பு எல்லாம் சேர்ந்து மத்திய கிழக்கை மேலும் சூடாக்கியுள்ளன. இந்தப் போர் மூண்டால் அது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}