"அண்ணன் வர்றார் ஒத்து.. நீ வா தல".. 2024 ஐபிஎல்.. கேப்டனாக தொடர்கிறார் தோனி.. ஃபுல் லிஸ்ட் ரிலீஸ்!

Nov 26, 2023,07:10 PM IST

மும்பை: ஐபிஎல் 2024ம் தொடருக்கான வீரர்களை தக்க வைக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வீரரான ஹர்டிக் பாண்ட்யாவை குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதனால் அவர் எதிர்பார்த்தது போல மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறவில்லை.


ஐபிஎல் 2024ம் தொடருக்கான முன் நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. முதல் கட்டமாக வீரர்களை தக்க வைக்க இன்றுடன் காலக்கெடு முடிவடைந்தது. இதையடுத்து தற்போது ஒவ்வொரு அணியிலும் யார் யாரெல்லாம் தக்க வைக்கப்பட்டுள்ளார்கள், யார் யாரெல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.


லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கே.எல். ராகுலையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷப் பந்த்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  இதில் ரிஷப் பந்த்  விபத்தில் சிக்கி ஓய்வில் இருந்து வருகிறார். முழு அளவில் அவர் உடல் நலம் தேறி விடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.




கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 வீரர்களை விடுவித்துள்ளது. அதில் ஷர்துள் தாக்கூரும் ஒருவர். அதேபோல சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இங்கிலாந்து வீரரான ஹாரி ப்ரூக்கை விடுவித்துள்ளது.  கடந்த சீசனில்தான் அவரை ரூ. 12.25 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியிருந்தத இந்த அணி என்பது நினைவிருக்கலாம்.


மும்பை இந்தியன்ஸ் அணி இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை விடுவித்துள்ளது. கடந்த சீசனில் இவர் காயம் காரணமாக விளையாட முடியாமல் போய் விட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஜோஷ் ஹேசல்வுட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் ஆகியோரை விடுவித்துள்ளது.


விடுவிப்பு மற்றும் தக்க வைப்புக்குப் பிறகு அணிகளின் விவரம்:


சென்னை சூப்பர் கிங்ஸ்


விடுவிக்கப்பட்டோர் விவரம்: பென் ஸ்டோக்ஸ், டிவைன் பிரிடோரியஸ், பகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதி, அம்பட்டி ராயுடு, ஆகாஷ் சிங், கைல் ஜெமிசன், சிசந்தா மகளா.


இறுதி அணி விவரம்: ருத்துராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, அஜிங்கியா ரஹானே, தீபக் சஹர், மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, மிட்சல் சான்ட்னர், ராஜவர்த்தன் ஹங்கர்கெகர், சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, பிரஷாந்த் சோலங்கி, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல்.


சன் ரைசர்ஸ் ஹைதராபாத்




அப்துல் சமத், அபிஷேக் சர்மா, அய்டன் மர்கரம், அமோல்ப்ரீத் சிங், புவனேஸ்வர் குமார், பசல்ஹக் பரக்கி, கிளன் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசன், மார்கோ ஜேன்சன், மயங்க் அகர்வால், மயங்க் மர்காண்டே, டி. நடராஜன், நிதீஷ் குமார் ரெட்டி, ராகுல் திரிபாதி, சன்வீர் சிங், சபாஷ் அகமது, உம்ரான் மாலிக், உபேந்திர சிங் யாதவ், வாஷிங்டன் சுந்தர்.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்


நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹமதுல்லா குர்பாஸ், ஷிரேயாஸ் ஐயர், ஜாசன் ராய், சுனில் நரீன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரஸ்ஸல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.


டெல்லி கேப்பிடல்ஸ்


ரிஷப் பந்த், டேவிட் வார்னர், அக்ஷார் படேல், குல்தீப் யாதவ், மிட்சல் மார்ஷ்,  பிருத்வி ஷா, யாஷ் துல், அன்ரிச் நார்டே, இஷாந்த் சர்மா,  கலீல் அகமது, முகேஷ் குமார், லுங்கி அங்கிடி, பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், லலித் யாதவ், அபிஷேக் போரல்.


ராஜஸ்தான் ராயல்ஸ்


சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், சிம்ரன் ஹெட்மயர், யாஷஸ் ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல், ரியான் பராக், டொனோவன் பெரைரா, குனால் ரத்தோர், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் சென், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, சந்தீப் சர்மா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சஹல், ஆடம் ஜாம்பா, அவேஷ் கான்.


பஞ்சாப் கிங்ஸ்


ஷிகர் தவன், ஜானி பேர்ஸ்டா, ஜிதேஷ் சர்மா, பிரப்சிம்ரன் சிங், மாத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் பாட்டியா, அதர்வா டெய்ட், ரிஷி தவன், சாம் கரன், சிக்கந்தர் ரஸா, லியம் லிவிங்ஸ்டன், குர்னூர் சிஹ் பிரார், சிவம் சிங், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார், வித்வத் கவரப்பா, காகிஸோ ரபடா, நாதன் எல்லிஸ்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு




பாப் டு பிளசிஸ், விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், முகம்மது சிராஜ், தினேஷ் கார்த்திக், ரஜத் படில்டார், ரீஸ் டாப்ளி, வில் ஜேக்ஸ், சுயாஷ் பிரபுதேசாய், அனுஜ் ராவத், மகிபாால் லோம்ரார், மனோஜ் பான்டேகே,க கரண் சர்மா, மயங்க் டகர், வைசாக் விஜயக்குமார், ஆகாஷ் தீப், ரஜன் குமார், ஹிமன்சு சர்மா.


லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்


கே. எல் ராகுல், குவின்டன் டி காக், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, கைல் மெயர்ஸ்,  மார்கஸ் ஸ்டாய்னிஸ்,  தீபக் ஹூடா, தேவ்தத் படிக்கல், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், க்ருணால் பாண்ட்யா, யுத்விர் சிங், பிரேரக் மங்கட், யாஷ் தாக்கூர், அமித் மிஸ்ரா, மார்க் உட், மயங்க் யாதவ்,  மோசின் கான்.


மும்பை இந்தியன்ஸ்


ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா, சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷன், பியூஷ் சாவ்லா, அர்ஜூன் டெண்டுல்கர், திலக் வர்மா, விஷ்ணு வினோத், ஷாம்ஸ் முலானி, குமார் கார்த்திகேய சிங், நெஹல் வத்ரா, ஆகாஷ் மத்வால்,  டிம் டேவிட், டேவால்ட் பிரேவிஸ், ஜேசன் பெஹ்ரன்டிராப்,  கேமரூன் க்ரீன், ரொமாரியோ ஷெப்பர்ட்


குஜராத் டைட்டன்ஸ்


ஹர்டிக் பாண்ட்யா, டேவிட் மில்லர், சுப்மன் கில், ரஷீத் கான், ராகுல் தேவாடியா, முகம்மது ஷமி, நூர் அகமது, சாய் கிஷோர், மாத்யூ வாட், விருத்திமான் சஹா, கனே வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ஜோசுவா லிட்டில், மொஹித் சர்மா

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்