IPL Auction 2024: டிராவிஸ் ஹெட்.. முட்டி மோதிய சிஎஸ்கே.. தட்டிக் கொண்டு போன சன் ரைசர்ஸ்!

Dec 19, 2023,09:13 PM IST

துபாய்:  ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பையை வெல்லக் காரணமான டிராவிஸ் ஹெட்டை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 7.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.


நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டித் தொடரில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்று அசத்தியது. அந்த அணியின் முக்கிய வீரரான டிராவிஸ் ஹெட் அபாரமான சதம் அடித்து இறுதிப் போட்டியில் தனது அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார்.


இன்றைய வீரர்கள் ஏலத்தில் டிராவிஸ் ஹெட்டுக்கு நல்ல கிராக்கி இருந்தது. ரூ. 2 கோடி அடிப்படை விலையுடன் டிராவிஸ் ஹெட் ஏலம் விடப்பட்டார். அவரை எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முட்டி மோதின.




இரு அணிகளும் டிராவிஸை எடுக்க மும்முரமாக இருந்ததால் விலை ஏறிக் கொண்டே போனது. கடைசியில் டிராவிஸ் ஹெட்டை, ரூ. 7.80 கோடிக்கு  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தட்டிக் கொண்டு போய் விட்டது. சென்னை இவரை ஏலத்தில் எடுத்து விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சன் ரைசர்ஸ் அள்ளிக் கொண்டு போய் விட்டது.


ஆஸ்திரேலிய அணியின் நடுக்கள வீரராக முக்கியமான வீரராக வலம் வருபவர் டிராவிஸ் ஹெட். மைக் ஹஸ்ஸிக்குப் பிறகு அந்த இடத்தில் சரியான வீரர் இல்லாமல் தடுமாறியது ஆஸ்திரேலியா. அதை சரி செய்ய தோதாக வந்து சேர்ந்தவர்தான் டிராவிஸ் ஹெட். 2015ம் ஆண்டுதான் அவர் அணியில் முக்கிய இடம் பிடித்தாதர். ஆனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்த அபார சதம்தான் அவரை உலகப் புகழுக்கு உயர்த்தியது.


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மண்ணில் பிரதமர் மோடி உறுதி தர வேண்டும்.. ஊட்டியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

news

நவீன பாம்பன் கடல் பாலம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.. புதிய ரயிலுக்கும் பச்சைக் கொடி!

news

அமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திச்சேனா.. நாம் தமிழர் தலைவர் சீமான் திட்டவட்ட மறுப்பு!

news

Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!

news

அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

அதிகம் பார்க்கும் செய்திகள்