பலத்த போட்டிக்கு மத்தியில்.. ரூ. 14 கோடிக்கு டெரில் மிட்சலை வாரி எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Dec 19, 2023,09:13 PM IST

துபாய்:  நியூசிலாந்து ஆல் ரவுண்டர் டெரில் மிட்சலை கடும் போட்டிக்கு மத்தியில் ரூ. 14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். 


இவரை எப்படியும் எடுத்தாக வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்ததால், விலை அதிகரித்தபோதும் கூட கவலைப்படாமல் பெரிய விலை கொடுத்து மிட்சலை வாங்கியுள்ளது.


நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக வலம் வருபவர் டெலிர் மிட்சல். சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான டெரில் மிட்சல், 2011 முதல் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருபவர் டெரில் மிட்சல்.  நடுக்கள ஆட்டக்காரரான மிட்சல் இன்னிங்ஸை நிலை நிறுத்தி ஆடுவதில் கில்லாடி. ஸ்லோ பந்துகளை போட்டு விக்கெட்களை வீழ்த்துவதில் சூப்பராக செயல்படக் கூடியவர். 

2019ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் முதலில் டி20 போட்டிகளில் அறிமுகமானார். 2021 டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் முக்கியப் பங்காற்றி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற உதவினார்.




டெரில் மிட்சலை இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மிகப் பெரிய விலை கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. அதாவது ரூ. 14 கோடிக்கு அவர் விலை போனார். அவரை எப்படியும் விலைக்கு வாங்கி விட வேண்டும் என்ற வேகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்தது. இதனால் விலை பெரிதாக இருந்தாலும் கூட அவரை எடுத்து விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்