சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐக்கானிக் வீரர் தோனி, கடைசி ஓவர்களில் களம் இறங்குவது குறித்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 18 வருடமாக நீடித்து வருகிறார் தோனி. ஆரம்பத்தில் கேப்டனாக இருந்தார். கடந்த 2 சீசன்களாக அவர் கேப்டன் பொறுப்பில் இல்லை. ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையில் அணி விளையாடி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே தோனி விளையாடும் கடைசித் தொடர் இதுதான் என்று கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்ப அவரும் விளையாடுவது லிமிட் செய்து விட்டதாகவே தெரிகிறது. கடந்த ஆண்டு கூட அவர் கடைசி நிலையில்தான் வந்து விளையாடினார். இருப்பினும் தோனியைப் பார்க்க முடிகிறதே அதுவே போதுமானது.. நீங்க வந்தா மட்டும் போதும் என்று ரசிகர்கள் திருப்திப்பட்டு வந்தனர்.
ஆனால் இந்த ஆண்டும் கூட அதேபோலத்தான் கடைசி வரிசையில் இறங்குகிறார் தோனி. மும்பையுடன் நடந்த முதல் போட்டியில் கடைசி நிலையில் களம் இறங்கினார் தோனி. 6 ரன்கள்தான் அப்போது வெற்றிக்குத் தேவை. ஆனால் அந்த ரன்களை தோனி அடிக்கவில்லை. அவர் அப்போட்டியில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்த போட்டியான பெங்களூரு போட்டியிலும் கடைசி நிலையில்தான் ஆட வந்தார் தோனி. ஆனால் சிக்சரும், பவுண்டரியுமாக அதிரடி காட்டினார். இருப்பினும் அப்போட்டியில் சென்னை தோல்வியடைந்தது. நேற்று நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இதேபோலதான் நடந்தது. நன்றாக விளையாட ஆரம்பித்த நிலையில், எதிர்பாராதவிதமாக அவுட்டானார் தோனி. அவர் அவுட்டானதும் போட்டி நமது கையை விட்டு ராஜஸ்தான் கைக்குப் போய் விட்டது.
இந்த நிலையில் தோனியை கடைசி வரிசையில் இறக்காமல் சற்று முன்கூட்டியே இறக்கலாமே என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எம் எஸ் தோனியின் முழங்கால்கள் முன்பு இருந்தது போல இப்போது இல்லை. எனவே அவரால் 10 முதல் 12 ஓவர்கள் வரை பேட் செய்வது கடினம். அதேபோல அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டி உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அவரது பேட்டிங் ஆர்டர் முடிவு செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப முன்கூட்டியோ அல்லது பின்போ களம் இறக்கப்படுகிறார் தோனி.
தன்னால் முடிந்தவரை அணிக்கு பங்களிப்பு தருவதை தோனி விரும்புகிறார். எனவே தான் அவரது விருப்பத்திற்கே நாங்கள் அதை விட்டு விட்டோம். அவரது உடல் நிலையை மதித்து அவரது உடல் நிலைக்கு மரியாதை கொடுத்து நாங்கள் அவரது பேட்டிங் இடத்தை தீர்மானிக்கிறோம். அவரும் தன்னால் முடிந்தவரை ரண்களை சேர்க்க முயல்கிறார், செய்யவும் செய்கிறார்.
ரன்கள் மட்டுமல்லாமல் அணிக்கு பல்வேறு வழிகளிலும் உதவியாக இருக்கிறார் தோனி. இளம் வீரர்களுக்கு நிறைய ஆலோசனை தருகிறார். மூத்த வீரர்களை வழிநடத்துகிறார். கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். இப்படி தன்னால் முடிந்த அளவுக்கு அணிக்கு அனைத்து வகையிலும் அவர் உபயோகமாக இருக்கிறார் என்று தெரிவித்தார் பிளமிங்.
உண்மையில் இந்தத் தொடரில் கீப்பிங்கில் கலக்கிக் கொண்டிருக்கிறார் தோனி. சில முக்கிய விக்கெட்களை அவர் ஸ்டம்பிங் செய்த விதம், இளம் வீரர்களுக்கு மிகப் பெரிய ரோல் மாடல் தோனி என்பதை நிரூபித்துள்ளது.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}