ஜெட்டா: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2025 வீரர்கள் மெகா ஏலத்தில் 577 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். இதில் யார் அதிக விலைக்கு ஏலம் போகப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.
ஐபிஎல் 2025 தொடருக்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது பிசிசிஐ. முதலில் வீரர்கள் தக்கவைப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இதற்கான ஏலம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.
முதலில் 574 வீரர்கள் ஏலம் விடப்படுவதாக இருந்தது. பின்னர் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், அமெரிக்க வீரர் செளரப் நேத்ராவல்கர், மும்பை விக்கெட் கீப்பர் ஹர்டிக் தாமூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டு தற்போது 577 பேர் ஏலம் விடப்படவுள்ளனர்.
அணி வாரியாக வீரர்கள் காலியிடங்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை 7 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 21 பேரை லத்தில் எடுக்க முடியும். அவர்கள் வசம் ரூ. 55 கோடி நிதி கையிருப்பில் உள்ளது. மற்ற அணிகளில் உள்ள காலியிடங்கள் வருமாறு
அதிக வயதான வீரர்.. குறைந்த வயது வீரர்
ஏலப் பட்டியலில் மிக அதிக வயதான வீரராக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பெற்றுள்ளார். இவருக்கு 42 வயதாகிறது. இங்கிலாந்து அணியில் முக்கிய வீரராக வலம் வந்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 704 டெஸ்ட் விக்கெட்கள், 1126 முதல் வகுப்பு விக்கெட்களை வைத்துள்ளார். டி20 போட்டிகளில் 41 விக்கெட் சாய்த்துள்ளார். கடைசியாக 2014ம் ஆண்டு டி20 போட்டியில் ஆடியுள்ளார். இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மிகவும் இளம் வயது வீரர் என்ற பெருமை 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷிக்குக் கிடைத்துள்ளது. பீகாரைச் சேர்ந்த இந்த வீரர், ரஞ்சி டிராபி போட்டியில் 12 வயதிலேயே அறிமுகமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர். 5 முதல் தர போட்டிகளில் 10 இன்னிங்ஸ்களில் ஆடி 100 ரன்களை மட்டுமே இவர் எடுத்துள்ளார். ஆனால் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு நாள் போட்டிகளில் விளையாடி கவனம் ஈர்த்தவர். சென்னையில் நடந்த போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். அதேபோல பீகாரில் நடந்த யு 19 ஒரு நாள் போட்டித் தொடரில் முச்சதம் போட்டு அசத்தியவர். அதிரடி வீரராக வலம் வரும் இவர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளார்.
யாருக்கு செம கிராக்கி?
இந்திய வீரர் ரிஷாப் பந்த் மீதுதான் அதிக அளவிலான எதிர்பார்ப்பு உள்ளது. இவர்தான் அதிக விலைக்கு ஏலம் போவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதேபோல ஜோஸ் பட்லர், ஷ்ரேயாஸ் ஐயர், காகிசோ ரபடா, மிட்சல் ஸ்டார்க், முகம்மது சமி ஆகியோர் மீதும் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
டி. நடராஜனை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அஸ்வின் எந்த அணிக்குப் போகப் போகிறார் என்று தெரியவில்லை.
தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்
அணி வாரியாக தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}