Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Apr 05, 2025,07:23 PM IST

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கடும் எரிச்சலிலும் கோபத்திலும் ஆதங்கத்திலும் உள்ளனர். அதிரடியாக விளையாடக் கூடிய நம்ம சென்னை சூப்பர் கிங்ஸா இது என்று அவர்கள் விரக்தியுடன் கேட்கும் நிலையில் உள்ளனர். அடுத்தடுத்து 3 போட்டிகளை, அதிலும் 2 போட்டிகளை சென்னையிலேயே வைத்து மோசமாக தோற்றது ரசிகர்களை கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.


2025 ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரிய சோதனையாக மாறி வருகிறது. இன்று நடந்த போட்டியுடன் சேர்த்து மொத்தம் 4 போட்டிகளில் சென்னை விளையாடியுள்ளது. முதல் போட்டியில் மும்பையைத் தோற்கடித்தது. ஆனால் அடுத்த 3 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவியுள்ளது. 




பெங்களூரு, ராஜஸ்தான், இன்று டெல்லி என சென்னை அணி தோல்வியைத் தழுவியது பார்க்கவே படு மோசமாக உள்ளது. ஒவ்வொரு அணியும் அனல் பறக்க ஆடி வரும் நிலையில் சென்னை அணியினரோ வெல்ல வேுண்டும் என்ற உத் வேகத்தையே காட்டாமல் ஆடி வருவது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


சென்னை அணி கடந்த நான்கு போட்டிகளிலும் 2வதாக பேட்டிங் செய்துள்ளது.  அதில் மும்பையைத் தவிர மற்ற அனைத்து சேசிங்கிலும் கொஞ்சம் கூட போராட்ட குணத்தை சென்னை அணி காட்டவில்லை என்பது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. 


ஹோம் கிரவுண்டிலேயே இந்த அளவுக்கு சென்னை தடுமாற என்ன காரணம் என்பதும் புரியாத புதிராக உள்ளது. தொடக்க நிலையில் தொடர்ந்து வெற்றிகள் பெற்றால்தான் பின்னால், நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற எளிதாக இருக்கும் என்பதால் தொடக்கப் போட்டிகளை வெல்ல அனைத்து அணிகளுமே முயலும், போராடும். ஆனால் சென்னையிடம் அப்படி ஒரு போராட்டத்தையேக் காண முடியவில்லை.




இன்று நடந்த டெல்லி போட்டியில், சென்னையின் சேசிங் படு மோசமாக இருந்தது. குறிப்பாக விஜய் சங்கர் நிதானமாக ஆடியது ரசிகர்களை சோதித்து விட்டது. ஒவ்வொரு ரன்னாக அவர் சேர்த்த விதம் எதிரணியினரையும் கூட அயர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும். பல நேரங்களில் பந்து அவரது பேட்டிலேயே படவில்லை. அதாவது அவர் பந்தை வாங்கி அடிக்கவே முயலவில்லை என்பதுதான் கொடுமை.


அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே ஏமாற்றத்தைக் கொடுத்து அவுட்டானார். கேப்டன் கெய்க்வாட்டும் ஏமாற்றினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டேவன் கான்வேயும் சோபிக்கவில்லை. சரி ஜடேஜாவாவது ஏதாவது செய்வார் என்று பார்த்தால் அவரும் ஏமாற்றி விட்டார். தொடர் விக்கெட் வீழ்ச்சிகளால் சென்னை அணி மிகவும் மோசமாக தடுமாறியது.


5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி சென்னை. ஆனால் டெல்லி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை எந்தத் தொடரிலும் டெல்லி அணி சோபித்ததும் கிடையாது. அப்படிப்பட்ட அணியிடம் சென்னை தட்டுத் தடுமாறிய விதத்தைப் பார்க்கும்போது ஒரே கேள்விதான் எழுகிறது - Is CSK no more a champion team?




சென்னை அணியில் அதிரடியான வீரர்கள் இல்லை. ருத்துராஜ் கெய்க்வாட் தவிர்த்துப் பார்த்தால் பெரிய அளவிலான அடுத்த லெவல் வீரர்கள் உருவாகவில்லை. தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகியதுமே அந்த வேலையை சென்னை அணி நிர்வாகம் செய்திருக்க வேண்டும். ஆனால் தோனியே இன்னும் விளையாடிக் கொண்டுதான் உள்ளார். ஆனால் அவரும் கூட மேட்ச்வின்னராக இல்லை. அவரால் முன்பு  போல விளையாட முடியாது என்று தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கே சொல்கிறார்.


தற்போதைய தொடரில் வெற்றி பெற்ற எல்லா அணியிலும் அசத்தலான இளம் வீரர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் போர்க்குணத்துடன் விளையாடுகிறார்கள். பார்க்கவே சூப்பராக இருக்கிறது. ஆனால் சென்னை அணியில் அப்படி யாரையுமே பார்க்க முடியவில்லை. இந்த வருட தொடரில் சென்னை அணியின் முக்கியமான ஸ்டாராக அடையாளம் காணப்பட்டிருப்பது ஒரே ஒரு வீரர்தான்.. அது நூர் அகமது. ஒருவர் மட்டும் சிறப்பாக பங்களித்தால் போதுமா.. குறைந்தது பாதிப் பேராவது அசத்த வேண்டாமா?


சென்னை அணியில் பல வீரர்கள் எதற்கு இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சென்னை அணி மிகப் பெரிய மாற்றத்திற்குள்ளாக வேண்டும். நிறைய இளம் திறமையாளர்கள் சேர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சாம்பியன் டீம் என்ற பெருமையை தக்க வைக்க முடியும். இல்லாவிட்டால் சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் ஆதரவு முன்பு போல கிடைப்பது கடினமாகி விடும்.


இப்போது கூட தோனி அணியில் இருப்பதால்தான் ரசிகர்கள் அலை மோதிக் கொண்டு வருகிறார்கள். ஒரு வேளை தோனி ஓய்வை அறிவித்து விட்டால், சென்னை அணி இதேபோன்ற ஆதரவை பெறுமா என்பது கேள்விக்குறிதான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்