IPL Mega Auction: சவூதி அரேபியாவில்.. நவம்பர் 24, 25 தேதிகளில் வீரர்கள் மெகா ஏலம்.. பிசிசிஐ

Nov 06, 2024,05:34 PM IST

சென்னை: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி களில் சவுதி அரேபியாவில்  உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.


2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது. முதல் கட்டமாக வீரர்களை தக்க வைக்கும் நிகழ்வு நடந்து முடிந்துள்ளது. அடுத்து வீரர்கள் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. 


2024ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய பத்து அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடியது. அதேபோல் ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து விலக்கி ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுத்து அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடியது 




இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைஸ் ஹைதராபாத் மோதின. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.


இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 2025 இல் நடைபெறும் ஐபிஎல் தொடர் 18 வது சீசன் ஆகும். இதில் போட்டியிடும் 10 அணிகளில் 46 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்படவுள்ளனர். மெகா ஏலம் நடைபெறுவதற்காக சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வந்த நிலையில், இறுதியாக ஜெட்டா நகரை தேர்ந்தெடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.


2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதிகளின் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என  பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், சர்வதேச போட்டிகளில் விளையாடிய 320 வீரர்கள், சர்வதேச போட்டிகளில் விளையாடாத 125 வீரர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளை சேர்ந்த 30 வீரர்கள் என மொத்தம் 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். 

ரிஷப் பண்ட், கே எல் ராகுல், ஸ்ரேயாஸ்  ஐயர், முகமது சமி, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் இஷான்கிஷான் ஆகியோர் ஏலத்திற்கு வரும் முக்கிய வீரர்கள் சிலர் ஆவர். வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 91 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த 52 வீரர்களும்,  ஆஸ்திரேலியாவிலிருந்து 76 வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.  இந்த ஏலத்தில் 10 அணிகளுக்காக மொத்தம் 204 வீரர்களை வாங்க ரூபாய் 641.5 கோடி கையிருப்பு உள்ளது. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை இடம்பெறலாம்.


கடந்த ஆண்டுடன்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து தோனி விடை பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் தோனி மீண்டும் பங்கு பெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  அணிக்கு ஒரு Moral Supportக்காகவே தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ்  நிர்வாகம் தக்க வைத்திருப்பதாக கருதப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மினி பஸ்களில்.. இனி மினிமம் டிக்கெட் ரூ. 4.. அதிகபட்சம் 10 ரூபாய்.. புதிய கட்டண விகிதம் அறிவிப்பு

news

வெயில் தொடங்கி விட்ட போதும்.. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. நாளை 100வது செயற்கைக் கோளை ஏவுகிறது!

news

தலித் ஊழியரை பொய் வழக்கில் சிக்க வைத்ததாக.. இன்போசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்டோர் மீது வழக்கு

news

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் அருகே.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி அன்பு!

news

தமிழக வெற்றிக் கழகத்தில்.. அடுத்தபடியாக.. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு!

news

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் தெரியமா.. டாக்டர் அன்புமணி பேச்சு

news

சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

news

அமெரிக்கா செல்லவுள்ளார் பிரதமர் மோடி.. டிரம்ப்புடன் முக்கியப் பேச்சு.. எப்போது, எத்தனை நாட்கள்?

அதிகம் பார்க்கும் செய்திகள்