ஜெட்டா: அடேங்கப்பா.. இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சம்பவங்கள் இன்று சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்து வருகிறது. ஐபிஎல் வீரர்கள் ஏல வரலாற்றிலேயே முதல் முறையாக இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு ஏலம் போய் பெரும் வியப்பலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரை மிஞ்சி விட்டார் ரிஷப் பந்த்.
ஜெட்டாவில் இன்று தொடங்கிய ஐபிஎல் ஏலத்தில் எடுத்த எடுப்பிலேயே விறுவிறுப்பு ஏற்பட்டு விட்டது. முதல் வீரராக இந்தியாவின் அர்ஷ்தீப் படேல் ஏலம் விடப்பட்டார். கடும் கிராக்கியுடன் உயர்ந்து கொண்டே வந்த அவரது தொகை கடைசியில் ரூ. 18 கோடியில் வந்து நின்றது. அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
ஆனால் அதை விட பல மடங்கு பரபரப்பைக் கூட்டியவர் ஷ்ரேயாஸ் ஐயர்தான். இவரை ஏலம் எடுக்க டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் என்று பல அணிகளும் ஆர்வம் காட்டின. கடைசியில் இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 26.75 கோடிக்கு ஏலம் எடுத்து மிரள வைத்து விட்டது.
இதுவரை நடந்த ஐபிஎல் ஏல வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனவர் ஐயர்தான். தோனியோ, ரோஹித் சர்மாவோ, விராட் கோலியோ கூட இந்த அளவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது கிடையாது. அந்த வகையில் புதிய வரலாறு படைத்து விட்டார் ஐயர்.
மிரள விட்ட ரிஷப் பந்த்
ஆனால் அடுத்த சில நிமிடங்களியே இந்த சாதனையை ரிஷப் பந்த் தகர்த்து விட்டார். அவரை ஏலத்தில் எடுக்க சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் கடுமையாக மோதின. இதனால் ரேட் ரூ. 20 கோடியைத் தாண்டியது. இருப்பினும் கடைசி நேரத்தில் லக்னோ அணி ஆர்டிஎம் ஆப்ஷனைப் பயன்படுத்தி ரூ. 27 கோடிக்கு அவரைத் தூக்கி விட்டது. இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிக விலைக்குப் போன வீரராக ரிஷப் பந்து வந்து விட்டார்.
இன்று ஏலம் போன வீரர்கள் பட்டியல்:
ரூ. 18 கோடிக்கு அர்ஷ்தீப் படேலை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி
ககிஸோ ரபாடா ரூ. 10.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது
ஷ்ரேயாஸ் ஐயர்.. புதிய வரலாறு ரூ. 26.75 கோடிக்கு அள்ளிய பஞ்சாப் கிங்ஸ்
ஜோஸ் பட்லர் ரூ. 15.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் ஏலத்தில் எடுத்தது
மிட்செல் ஸ்டார்க் ரூ. 11.75 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்
ரிஷப் பந்த் ரூ. 27 கோடி (லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்)
முஹம்மது ஷமி ரூ. 10 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சென்றார்
யுஸ்வேந்திர சஹல் - ரூ. 18 கோடி பஞ்சாப் கிங்ஸ்
லியம் லிவிங்ஸ்டன் - ரூ. 8.75 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
கே.எல் ராகுல் .. ரூ. 14 கோடிக்கு .. டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்
ஹேரி ப்ரூக் - ரூ. 6.25 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்
தேவ்தத் படிக்கல் - ஏலம் போகவில்லை
டேவன் கான்வே - ரூ. 6.25 கோடி -சென்னை சூப்பர் கிங்ஸ்
ராகுல் திரிபாதி - ரூ. 3.40 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
டேவிட் வார்னரை யாரும் ஏலம் எடுக்கவில்லை
ஹர்ஷல் படேல் - ரூ. 8 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ரச்சின் ரவீந்திரா - ரூ. 4 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
ஆர். அஸ்வின் - ரூ. 9.75 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்
வெங்கடேஷ் ஐயர் - ரூ. 23.75 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
CKS wakes up.. ரச்சின் ரவீந்திரா, டேவன் கான்வே, ராகுல் திரிபாதியை அடுத்தடுத்து வாங்கியது!
A R Rahman.. உலகிலேயே மிகவும் சிறந்த மனிதர் ஏ.ஆர். ரஹ்மான்.. உருக்கமான ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு
பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!
இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!
IPL Auction 2025.. ஐபிஎல் மெகா ஏலம்.. திக் திக் காத்திருப்பில் 577 வீரர்கள்.. செம கிராக்கி யாருக்கு?
அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
{{comments.comment}}