கையில் 31 கோடி ரூபாய் இருக்கு.. சிஎஸ்கே என்ன பண்ணப் போகிறது.. தோனியின் பிளான் என்ன?

Dec 11, 2023,05:54 PM IST

சென்னை: டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2024 வீரர்கள் ஏலம் குறித்து அனைவரின் கவனமும் திரும்பி வருகிறது. குறிப்பாக கை நிறையப் பணத்தை வைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரையெல்லாம் கொத்திக் கொண்டு வரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தற்போது ரூ. 31.4 கோடி அளவுக்குப் பணம் உள்ளது. இதை வைத்துக் கொண்டு பெரிய பெரிய வீரர்களை எளிதாக எடுக்க முடியும். 


2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் பீவர் இப்போதே தொடங்கி விட்டது. டிசம்பர் 19ம் தேதி துபாயில் வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நடப்புச் சாம்பியனாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. இந்த முறையும் பட்டத்தைத் தக்க வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மும்முரமாக உள்ளது.




எனவே சூப்பரான வீரர்களை அணியில் கொண்டு வரவும் அது தீவிரமாக உள்ளது. அணியின் முக்கிய வீரர்களாக இருந்த பென் ஸ்டோக்ஸ், அம்பட்டி ராயுடு, டிவெய்ன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன் ஆகியோர் தற்போது விடுவிக்கப்பட்டு விட்டனர். எனவே புதிய ஸ்டார்களை தேர்ந்தெடுக்கும் நிலையில் சென்னை உள்ளது.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது உள்ள 19 வீரர்கள் - தோனி, மொயீன் அலி, தீபக் சஹர், டேவன் கான்வாய், துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருத்துராஜ் கெய்க்வாட், ராஜ்வர்த்தன் ஹங்கர்கர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் செளத்ரி, மதீஷா பதிரனா, அஜிங்கியா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்சல் சான்ட்னர், சிம்ரஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரஷாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் உள்ளனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மேலும் 6 வீரர்களை அதிகபட்சமாக  ஏலத்தில் எடுக்க முடியும். அந்த ஆறு பேர் யார் என்ற கேள்விதான் இப்போது பெரிதாக தொக்கி நிற்கிறது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரேடாரில் சில முக்கிய வீரர்கள் உள்ளனர். ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்சல், மனீஷ் பாண்டே, ஷாருக் கான், கருண் நாயர், ஷர்துள் தாக்கூர், ஜோஷ் ஹேசல்வுட், ஹர்ஷல் படேல், மிட்சல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அவர்களில் சிலர்.


இதில் சமீபத்தில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடியிருந்தார். அதேபோல ஸ்டார்க்கும் அசத்தியிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்த சதத்தைப் போட்டவர் டிராவிஸ் ஹெட். ஷாருக்கான் சென்னை வீரர்.. இப்படி பல முக்கிய அம்சங்கள் உள்ளன.


"தல" தோனி இதில் என்ன முடிவில் இருக்கிறார்.. அவரது திட்டம் என்ன என்பது மில்லியன் டாலர் கேள்வி.. அதேசமயம், இந்தத் தொடர் மிக மிக விறுவிறுப்பாக இருக்கும்.. அனேகமாக இது தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராகவும் இருக்கக் கூடும் என்பதால் வீரர்கள் தேர்வும் அதிரடியாக இருக்க வாய்ப்புள்ளது. பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்