"ஐடன் மார்க்ரம்".. இனி இவர் தான் கேப்டன்.. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி செம அறிவிப்பு!

Feb 23, 2023,01:09 PM IST
ஹைதராபாத்: ஐபிஎல் 2023 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.



இதுதொடர்பான அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தில் செம சூப்பராக ஒரு வீடியோ மூலமாக அது அறிவித்துள்ளது. 

அக்காலம் தொடங்கி இக்காலம் வரை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. கையில் எது கிடைத்தாலும் அதை பேட்டாக நினைத்து காற்றில் சிக்ஸர் அடிக்கும் சுகமே தனி.. அதேபோல் சில கிரிக்கெட் பிரியர்களுக்கு கை எப்போதும் பரபர வென இருக்கும், கையில் ஒன்றுமில்லை என்றாலும் காற்றிலேயே பௌலிங் போட்டுகொண்டு போவார்கள்..

இப்படியாக இந்தியர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் ஒரு பெரிய வரலாறே இருக்கும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் என்ற கிரிக்கெட் லீக் போட்டியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. அன்று தொடங்கி இன்று வரை ஐபிஎல் லீக் போட்டிகளின் மீது கொண்டுள்ள சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் வருடா வருடம்.. கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டு செல்கின்றது.



இந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடர் இப்போதே களை கட்டத் தொடங்கி விட்டது. அணிகள் அனைத்தும் போட்டித் தொடருக்குத் தயாராக ஆரம்பித்து விட்டன.  அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  தனது கேப்டனை அறிவித்துள்ளது. ஐடன் மார்க்ரம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரரான ஐடன், 2021 ஆம் ஆண்டு சீசனில்  பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் போட்டியில் விளையாடியவர். பின்னர் 2022 ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணியில் இணைந்து களம் கண்டார். அந்த சீசனில் ரன் குவிப்பில் இறங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தியவர் ஐடன். இந்த முறை அவர் கேப்டனாகியுள்ளார். அவரது தலைமைப் பொறுப்பையும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதுவரை ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியூசிலாந்து நாட்டின் கேன் வில்லியம்சன் இருந்து வந்தார். கேப்டன் மாற்றம் ஹைதராபாத்துக்கு ஏற்றும் தருமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்