EXCLUSIVE: நடிகைகளை எப்படிங்க அப்படி பேசலாம்.. தப்புங்க.. வெளுத்து வாங்கிய நடிகை ஆர்த்தி கணேஷ்கர்!

Mar 07, 2024,05:54 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: எந்த நடிகையை பற்றியும் அவர்களோட கேரக்டர் தெரியாம பொது இடத்தில் தவறாக பேசுவது மிகப்பெரிய தவறு. அந்த ரைட்ஸ் யாருக்குமே கிடையாது. இந்த மாதிரி தப்பா பேசுறவங்களை கண்டிப்பா தண்டிக்கணும் என நடிககை ஆர்த்தி கணேஷ்கர் குமுறியுள்ளார்.


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு பெயர் என்றால் அந்த லிஸ்ட்டில் ஆர்த்தி கணேஷ்கருக்கும் முக்கிய இடம் உண்டு. வந்து நின்றாலே மனம் லேசாகும் அளவுக்கு சிரிக்க வைத்து கலகலப்பாக்கக் கூடிய திறமை படைத்தவர் நம்ம ஆர்த்தி.. அவருக்கு ஹாரத்தி என்ற பெயரும் உண்டு. 


ஆர்த்தி கணேஷ்கர்  ஒரு சிறந்த காமெடி நடிகை. 1987 ஆம் ஆண்டு வெளிவந்த வண்ணக்கனவுகள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அறிமுகமானவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என பல மொழிகளில் சுமார் 64 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 


இவர் நடித்த காமெடிப் படங்களின் லிஸ்ட் மிகப் பெரியது.. அருள் படத்தில் இவரின் காமெடி இன்று பார்த்தாலும் அப்படி ரசிக்க வைக்கும்.. நடிகர் வடிவேலுக்கு இணையாக காமெடியில் கலக்கி இருப்பார் ஆர்த்தி கணேஷ்கர். அதேபோல கிரி, குட்டி, தாமிரபரணி, வில்லு, படிக்காதவன், ஐந்தாம்படை, உத்தபுத்திரன், தடையற தாக்க.. என்று இவர் நடித்த காமெடிப் படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.


இது தவிர சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் விளங்கியவர். நகைச்சுவை நடிகரான கணேஷ்கரை திருமணம் செய்து கொண்டார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்று சிறந்த டான்ஸ் ஜோடி என்ற இரண்டாவது பரிசை வென்று அசத்தினர். தமிழ்நாடு அரசு வழங்கும் கலைமாமணி விருதும் பெற்றவர் நம்ம ஆர்த்தி.


மகளிர் தினத்துக்காக, ஆர்த்தி கணேஷ்கர் தென் தமிழ் இணையதளத்துக்காக ஒரு சிறப்பு பேட்டி அளித்து அசத்தியுள்ளார். பேட்டியில் பல சுவாரசியமான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து உள்ளார். வாங்க பேட்டிக்குள்ள போய்ரலாம்...!




வணக்கம் மேம்.. எப்படி இருக்கீங்க.. பெரிய திரை டூ சின்னத்திரை பிறகு இரண்டிலும் அசத்தலா நடிச்சிட்டிருக்கீங்க.. இடையில் பிக்பாஸிலும் புகுந்து விளையாடுனீங்க. இப்ப லேட்டஸ்ட்டா என்ன படம் நடிச்சிட்டிருக்கீங்க மேடம்?


நான் முதல்ல நடிச்சதே பெரிய திரைதான். பிறகு சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் நடிச்சிருக்கேன். குழந்தை நட்சத்திரமா 64 படம் பண்ணிருக்கேன்.  டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிச்சிருக்கிற வெப்சீரிஸ் சேவ் தி டைகர்ஸ் பண்ணிருக்கேன். தமிழ், தெலுங்குல தயாரிக்கப்பட்டது அது. பிறகு, கோல்மால் அப்படின்னு ஒரு படம். ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் நடிச்சிருக்கிற படம். பிறகு ராயல்னு ஒரு படம். 

 

காமெடி நடிகர்கள் எல்லாம் ஹீரோக்களாக அதாவது கதை நாயகர்களாக நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.. உங்க கிட்ட அப்படி எதுவும் ஐடியா இருக்கா மேடம்..? 


ஐடியா இருக்கு. ஹீரோயினா நடிக்க.


காமெடியா நடிக்கிறவங்களுக்கு அவங்களோட பாடி லாங்குவேஜ்தான் மிகப் பெரிய பலம்னு சொல்வாங்க.. ஆனால் நீங்க டயலாக்கிலேயே காமெடியை கொண்டு வருவீங்க.. குறிப்பாக மாடுலேஷனில் நீங்க ரொம்ப ஸ்டிராங்.. இது எப்படி கை கூடுச்சு மேம்?


தெரியல, அது காட் ப்ளஸ்சா இருக்கலாம். என்னோட கேரக்டரை அந்த காமெடிக்கு எப்படி மெர்ஜ் பண்ணலாம் அப்படின்னு நடிப்பேன். காமெடியா தோணுச்சுன்னா காமெடியா பண்ணலாம். டயலாக் இம்ப்ரூவ் பண்ணலாம். பாடி லாங்குவேஜ் செட் ஆச்சுன்னா பாடி லாங்குவேஜ்ல பண்ணலாம். டயலாகையோ அல்லது சீனையோ பார்க்கும்போதுதான் நமக்கு என்ன செட்டாகும் என தோன்றும்.




நடிகைகள் குறித்து இப்பெல்லாம் டக்குன்னு விமர்சனம் பண்ணிப் பேசறவங்க அதிகமாகிட்டாங்க.. குறிப்பாக சமீபத்தில் திரிஷா குறித்து அடுத்தடுத்து சிலர் பேசியது பெரும் பரபரப்பை கிளப்புச்சு.. இந்தப் போக்கு பத்தி என்ன நினைக்கறீங்க மேம்?


அது மிகப்பெரிய தவறுங்க. யாரும் யாரைப் பத்தியும் அவங்களோட கேரக்டர் பத்தி தெரியாம பேசுறது மிகப்பெரிய தவறு. அந்த ரைட்ஸ் யாருக்குமே கிடையாது. அவங்கள பத்தி கன்ஃபார்மா நம்மளுக்கு தெரிஞ்சா, ப்ரூஃப் இருந்தா கூட .. ஒருத்தங்களப் பத்தி பொது இடத்தில் அவமானப்படுத்துவது என்பது மிகப் பெரிய தவறு. பிரபல நடிகையா இருந்தா அவங்கள பத்தி என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என்று சமுதாயம் நினைக்குது. அதை எல்லாரும் நம்புவாங்கனு நினைக்கிறது தப்பு. இந்த மாதிரி சொல்றதும் மிகப் பெரிய தப்பு. அவர்கள் மிகக் கடுமையாக தண்டிக்கப்படணும். அப்பதான் யாரை வேணும் என்றாலும்.. என்ன வேணாலும் பேசலாம் என்பது நடக்காது. ஒரு போலீசையோ அல்லது வக்கீலையோ  பத்தி தப்பா பேச முடியுமா. ஆனால் ஒரு நடிகை பத்தி மட்டும் தப்பா பேசினா யாரும் சப்போர்ட்டுக்கு வர மாட்றாங்க. நடிகையே இப்படித்தான் அப்படின்னு தப்பா நினைக்கிறாங்க. அதனால தப்பா பேசுறவங்களை தண்டிக்கணும்.


நடிகைகளுக்கு இப்போது புதுசா ஒரு பிரச்சினை வந்திருக்கு.. அதாவது deep fake அப்படிங்கிற ஒரு மிரட்டல்.. சமீபத்தில் கூட நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமா சித்தரிச்சு வீடியோ வெளியிட்டாங்க.. இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க.. டெக்னாலஜி ஆபத்தானதுன்னு நினைக்கறீங்களா?


Deep fake கண்டிப்பா ஆபத்து தான். அது அந்த நடிகை தானா.. உண்மையா, இல்லையா அப்படிங்கிற டவுட்டு எல்லாத்துக்கும் வந்துருச்சு. அவங்களை மாதிரியே, டிரஸ் பண்ணிக்கிட்டு நடிக்கிறாங்க. இது அவங்க சொன்னாதான் தெரியுது அது ஃபேக்கா இல்லையான்னு. அதனால மக்கள் இந்த மாதிரி  தேவையில்லாத fake வீடியோஸ் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்.




முன்னாடில்லாம் ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துதான் படங்கள் வந்தது.. இப்போ ஹீரோயின்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுது.. இது நல்ல மாற்றம்னு நினைக்கறீங்களா அல்லது போதுமானதாக இல்லை, இன்னும் அதிகமாக வேண்டும்னு நினைக்கிறீங்களா..?


இது பத்தாதுங்க. எனக்கு தெரிஞ்சு சமீப காலமா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தாண்டி பெண்களுக்கு முக்கியத்துவம் தர  கதைகள் வருதுன்னு எனக்கு தோணவே இல்லை.


காமெடியைப் பொறுத்தவரை அதிக அளவில் ஆண் காமெடியன்களுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்குது. பெண் காமெடியன்களுக்கு பெரிய அளவில் தரப்படுவதில்லை. இதைப் பத்தி என்ன நினைக்கறீங்க? 


ஏன்னா  பெண் காமெடியாளர்களை  ஊக்குவிக்கிற தன்மை டைரக்டர்ஸ்க்கு இல்லை. அவங்களை பொறுத்தவரை அவங்க வீட்டுக்குப் பெண்களே நகைச்சுவையை சொன்னா ரசிப்பாங்களா என்றுகூட தெரியலை. ஏனென்றால் பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி என்று ஆண்கள் நினைக்கிறார்கள். இதுதான் காரணம். இது மாறனும் என்றால் நல்ல டைரக்டர்கள், கதாசிரியர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பாக்குற ஆடியன்ஸும் பெண்கள் பண்ற காமெடிகளை வரவேற்றார்கள் என்றால்,  நிச்சயமாக பெண் காமெடியாளர்கள் எந்த வகையிலும் ஆண் காமெடியாளர்களுக்கு குறைவு இல்லை என்று நிரூபிப்பாங்க.


நீங்க நிறைய காமெடி நடிகர்களோட நடிச்சிருக்கீங்க.. உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச காமெடி நடிகர் யாரு மேடம்.. நடிகைகளில் யாரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?


எனக்கு எல்லா காமெடி நடிகர்களையும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவங்க நம்மள சிரிக்க வைக்கிறாங்க. நம்மளை யார் வேணாலும் அழ வைத்து விடலாம். ஆனால் சிரிக்க வைப்பது ரொம்ப கஷ்டம். சிரிக்க வைக்கிற காமெடி ஆர்டிஸ்ட் எல்லாம் என்னை பொறுத்த அளவு, அவங்க தான் சூப்பர் ஸ்டார் மாதிரி.




மக்கள் ஆதரவோட, பெரிய திரை, சின்னத்திரை என இரண்டையும் வென்ற நடிகை நீங்க.. சின்னத்திரை காமெடிக்கும், பெரிய திரை காமெடிக்கும் வித்தியாசம் இருக்கா? 


ரெண்டுக்கும் கேமரா தான் வித்தியாசம். பெரிய திரையில பெரிய கேமராவா இருக்கும். சின்ன திரையில் சின்ன கேமராவா இருக்கும், அவ்வளவுதான். நடிப்பு, திறமை என்பது எல்லா இடத்திலும் ஒன்றுதான்.


நீங்க காமெடி மட்டும்தான் நடிப்பீங்களா அல்லது வேறு ஏதாவது வித்தியாசமா பண்ணனும்னு ஆசை இருக்கா?


(சிரித்துக் கொண்டே) நான் பிக்பாஸில் எல்லாம் வில்லிங்க. காமெடி தாங்க எனக்கு பிடிக்கும்.


பெண்களோட நிலை சினிமாவில் எப்படி இருக்கு. சமூகத்தில் எப்படி இருக்கு.. இது பத்தி உங்களோட கருத்து என்ன?




பெண்கள், ஆண்கள் இல்லாம ஒன்றுமே இல்லைங்க. பெண்களோட வளர்ச்சி என்பது ஆண்களின் ஆதரவில்தாங்க இருக்கு. பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை, பெண்கள் வந்து ஆண்களை விட மேலே, பெண்களை ஆண்கள் அடக்குகிறார்கள் என்று கூறுவதெல்லாம் ரொம்ப தப்புங்க. என்னோட கணவர், என்னோட சகோதரர், என்னோட அப்பா, இவர்கள் எல்லாம் தான் என்னுடைய வெற்றிக்கு காரணம் என்று எல்லா பெண்களும் நினைத்தால் தான், எப்போதுமே ஆண்கள் நம்மளுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. நம்மள நல்லா வச்சுக்குவாங்க.பெண்கள் இப்ப எல்லா துறைகளிலும் சிறப்பாக இருக்கிறார்கள். பெண்கள் ஆண்களுக்கு நிகர்னு இல்லை, ஆண்கள் பெண்களை உயர்த்தி வச்சிருக்காங்க. சிவனே தன் உடம்பில் சக்திக்கு பாதி இடத்தை கொடுத்து இருக்காங்கன்னா பாருங்களேன்.


மகளிர் தினத்தையொட்டி நீங்க பெண்களுக்கு சொல்ல விரும்பும் மெசேஜ் ?


மகளிர் தினமான வரும் மார்ச் எட்டாம் தேதி மாலை மியூசிக் அகாடமில பெண்களுக்காக நான் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணி இருக்கிறேன். கண்டிப்பா எல்லா பெண்களும் வரணும். நிகழ்ச்சியைப் பார்க்கணும். ரசிக்கணும். இது பெண்களுக்காக பெண்களால் பெண்களே நடத்தும் நிகழ்ச்சி. அதற்குப் பெயர் "கோல்டன் சன்ட்ரைன்". அதாவது தங்கமான நேரம் நம்மளுக்கு எல்லாம் வரணும், அதனால நம்ம விடியல் பொன்னிறமா மாறனும் அப்படிங்கிறதுக்கான நிகழ்ச்சி. அதற்கு எல்லோரும் வரணும் அப்படின்னு நினைக்கிறேன்.  எல்லா பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். நீங்க நினைச்சதெல்லாம் நடக்கட்டும்.


நடிகை ஆர்த்தி கணேஷ்கருக்கும், நமது வாசகியர்கள் அனைவருக்கும், அனைத்துப் பெண்களுக்கும் நம்மளோட அட்வான்ஸ் மகளிர் தின வாழ்த்துகள்.. கனவுகள் நிஜமாகட்டும்.. சாதனைகள் வசமாகட்டும்!


Photo Credits: Aarthi Ganeshkar

சமீபத்திய செய்திகள்

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்