சென்னை: 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களில் சர்வதேச பலூன் நடைபெற உள்ளது. இந்த விழா நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இப்பண்டிகை ஜாதி மத இன பேதமின்றி உழவுத் தொழிலுக்கு நன்றி சொல்லும் வகையில் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். உழவர்கள் தங்களின் உழவு தொழிலுக்கு உதவிய இயற்கையான சூரியன் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் வைத்து, அதனை சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து இந்த விழாவை கொண்டாடுகின்றனர் . அதேபோல் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற தமிழர்களின் வீர விளையாட்டுகளும் இந்த பண்டிகையில் இடம்பெறுகின்றன.
அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை வருகிறது. இதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல் 15 ஆம் தேதியும், காணும் பொங்கல் 16 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் திங்கட்கிழமை போகி பண்டிகை 13ஆம் தேதி வருகிறது. ஜனவரி 13 முதல் 16 தேதி வரை நான்கு நாட்களோடு,போகி பண்டிகைக்கு முன்பு சனி, ஞாயிறு வார இறுதி நாட்களை சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை நாட்களை கொண்டாட மக்கள் இப்பவே ஆயத்தமாகி வருகின்றனர்.
இதற்கிடையே 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 10 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற பலூன் திருவிழாவில் 11 நாடுகள் பங்கேற்றது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச பலூன் திருவிழா, தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை, கோவை, மதுரை என முக்கிய நகரங்களில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி குறித்து விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2 கீழடுக்கு சுழற்சிகள்.. இன்றும் நாளையும் பரவலான கன மழையை எதிர்பார்க்கலாம்.. வானிலை மையம்
நடிகை கஸ்தூரி கைது செய்யப்படுவாரா.. முன்ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்தது மதுரை ஹைகோர்ட் பெஞ்ச்!
மருத்துவர்களையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.. பிரேமலதா விஜயகாந்த்
அரசு மருத்துவமனைகளில்.. நோயாளிகளுக்கு டேக் முறை அமல்.. மெட்டல் டிடெக்டர் சோதனையும் அறிமுகம்!
Palli vilum palan: ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம் .. கேட்டால்.. என்ன பலன் தெரியுமா?
தமிழ் கல்வெட்டுக்களை மைசூருக்கு மாற்ற திரைமறைவுப் பணிகள்.. சு. வெங்கடேசன் எம்.பி புகார்
மழைக்காலம் ஆரம்பிச்சிடுச்சு... நோய்கள் பரவும்... இதெல்லாம் பாலோ பண்ணுங்க.. சுகாதாரத்துறை அலர்ட்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி.. தோள்பட்டையில் ஆபரேஷன்
வட மாவட்டங்களில் இரவு நேர மழை.. டெல்டா, தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. தமிழ்நாடு வெதர்மேன்
{{comments.comment}}