இடைக்கால ஜாமீன் முடிந்தது.. மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Jun 02, 2024,05:42 PM IST

டில்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு  இடைக்கால ஜாமீனில் விடுதலையான டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று மாலை மீண்டும் திகார் சிறையில் சரணடைந்தார். 


டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை உள்ளிட்ட பல காரணங்களை சொல்லியம் இவருக்கு ஆரம்பத்தில் தொடர் பலமுறை ஜாமின் மறுக்கப்பட்டது. பிறகு கடந்த மாதம் ஜாமின் வழங்கி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.




தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளித்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை எழுப்பிய ஆட்சேபனையையும் அது நிராகரித்தது. இதையடுத்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபட்டார். அவரது பிரச்சாரம் பெரும் தாக்கத்தையும் வட இந்தியாவில் ஏற்படுத்தியது. 


இந்நிலையில் ஜூன் 02ம் தேதியான இன்று மாலையுடன் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் காலம் நிறைவடைந்தது. இதனால் காலையிலேயே வீட்டில் தனது பெற்றோரிடம் ஆசி பெற்று, வீட்டில் இருந்து கிளம்பிய கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ் கோட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். 


காலை முதல் இப்படி பல இடங்களுக்கும் சென்று வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை மீண்டும் திகார் சிறைக்கு சென்று சரணடைந்தார். கெஜ்ரிவால்  சென்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முன்னதாக கெஜ்ரிவால் வெளியிட்ட ஒரு செய்தியில், தான் மீண்டும் சிறைக்குப் போகப் போவதாகவும், அங்கு தான் மீண்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்படலாம் என்றும் தெரிவித்திருந்தார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டதால் வேறு வழியில்லாமல் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்