"தமிழக வெற்றி கழகம்".. ஆஹா.. கலரே வித்தியாசமே இருக்கே.. இதை கவனிச்சீங்களா யாராச்சும்!

Feb 02, 2024,06:18 PM IST

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விட்டார்.. கட்சியும் தொடங்கி விட்டார்.. பேரும் வச்சாச்சு, ரிஜிஸ்டரும் பண்ணியாச்சு.. அடுத்து 2026ல் கலக்கப் போறோம்.. கப்பு முக்கியம் பிகிலு என்று விஜய்யும் அறிவித்து விட்டார்.. இந்த நிலையில் விஜய் கட்சியின் கொடி குறித்து அறிய பலரும் செம ஆர்வமாக உள்ளனர்.


இந்த நிலையில்தான் விஜய் கட்சி அறிவிப்பு குறித்த வெளியான லெட்டர்ஹெட்டில் இடம் பெற்றுள்ள நிறங்கள் கவன ஈர்ப்பு பெற்றுள்ளன.


விஜய் மக்கள் இயக்கம் மன்றம் என்ற பெயரில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்த நடிகர் விஜய் எப்போது அரசியலில் குதிப்பார் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் இன்று முழுமையாக அரசியலில் இறங்கி உள்ளார். அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதற்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 




இதுதொடர்பான அறிக்கை வெளியான லெட்டர்ஹெட்டில், வித்தியாசமான நிறம் இடம் பெற்றுள்ளது. இதுதான் அனேகமாக கட்சியின் கொடியிலும், பிறவற்றிலும் இடம் பெறப் போகும் வண்ணமாக இருக்கும் என்று பலரும் ஊகித்து வருகின்றனர். அதாவது  மஞ்சள் மற்றும் மெரூன் நிறத்திலான கோடுகள் அந்த லெட்டர் ஹெட்டில் இடம் பெற்றுள்ளது. கட்சிக் கொடியில் இதுதான் இடம் பெற்றிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.


கட்சிகளை அடையாளப்படுத்தும் விதமாக ஒவ்வொரு கட்சிக்கும் கட்சிக்கொடி ஒன்று உள்ளது. தமிழ்நாட்டு கட்சிகள் விதம் விதமான கலரில் கொடிகளை வைத்துள்ளன. பெரும்பாலான கட்சிக் கொடிகளில் கருப்பு, சிவப்பு, வெள்ளை இருக்கும்.. திமுக என்றால் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்துடன் இருக்கும். அதிமுக கொடியில் கூட வெள்ளையும், அண்ணா விரல் சுட்டுவது போல இருக்கும். 


நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மெரூன் மற்றும் மஞ்சள் நிறம் இடம் பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் கட்சிக் கொடியில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற வாசகம் இடம் பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. 




மஞ்சள் நிறம் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்தும் மங்களகரமான நிறம் என்றும், மெரூன் அதாவது அடர் சிவப்பு என்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட நிறம் என்றும், வெள்ளை நிறம் தூய்மையை பிரதிபலிக்கும் அதாவது பொறுமை, இரக்கம், மனிதநேயத்தின் அடையாளம் என்றும் பொதுவாக கூறப்படுவதுண்டு. இதை வைத்து மகிழ்ச்சி - ஆற்றல் - மனிதநேயம் ஆகியவற்றையே தனது மோட்டோவாக விஜய் கூற வருகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


ஆக மொத்தத்தில் விஜய் கட்சி ஒவ்வொரு விதமாக.. வெறியேற்றிக் கொண்டுள்ளது ரசிகர்களை..!

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்