அடடா அடடா "அடை தோசை மிக்ஸ்"டா.. எப்படி பண்ணலாம்னு பார்ப்போமா!

Aug 22, 2023,04:03 PM IST

- மீனா

சென்னை: இன்ஸ்டன்ட் மிக்ஸ் பத்தி நாம பார்க்க ஆரம்பிச்சிருக்கோம் இல்லையா.. அதுல இன்னிக்கு 2வது ஐட்டத்தைப் பார்க்கலாமா.


ஒரு பிரச்சனைக்கு இன்ஸ்டன்ட்டா தீர்வு கிடைத்தால் நமக்கெல்லாம் அவ்வளவு சந்தோஷம் வரும். ஆனால் சீக்கிரமா சமைக்கணும் அதே நேரத்தில் ஹெல்தியாவும் இருக்கணும் என்ற பிரச்சினைக்கு இன்ஸ்டன்ட் மிக்ஸ் ஒரு தீர்வு என்றால் அது இன்னும் எவ்வளவு மகிழ்ச்சியை தரும். 




அந்த மாதிரி ஒரு மிக்ஸ் தான் முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அது மட்டுமல்ல அந்த மிக்ஸ் வைத்து ஒரு ரெசிபியும் எப்படி செய்வது என்று பார்த்தோம். அதே மாதிரி இன்னிக்கு இன்னொரு ஐட்டம் பார்க்கப் போறோம்.. வாங்க என்னன்னு சொல்றேன்..


துவரம் பருப்பு

கடலைப்பருப்பு

பாசிப்பருப்பு

உளுந்தம் பருப்பு இத்தனை பருப்புகளோடு சில பொருட்களையும் சேர்த்து இன்ஸ்டன்ட் மிக்ஸ் எப்படி ரெடி பண்ணுவது என்று முதல் கட்டுரையில் பார்த்தோம். அந்த இன்ஸ்டன்ட் மிக்ஸை வைத்து வேறொரு ரெசிபி ஆன "அடை தோசை" எப்படி செய்வது..அதைத்தான் இப்ப பார்க்கப் போறோம்.


தேவையான பொருட்கள்:


இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொடி-1 கப்

வெங்காயம்-1/4 கப்

பச்சை மிளகாய்-2

முருங்கைக்கீரை-1 கைப்பிடி அளவு

நறுக்கிய மல்லி இலை, கருவேப்பிலை-சிறிதளவு

நல்லெண்ணெய்-தேவையான அளவு

உப்பு-தேவைக்கேற்ப


முதலில் இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொடியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  நன்கு ஊறிய பிறகு இந்த இன்ஸ்டன்ட்  மிக்ஸில் மேலும் நமக்கு தண்ணீர் தேவை என்றால் சிறிது சேர்த்துக் கொள்ளலாம் இல்லை என்றால் சிறிது மோர் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதனுடன் வெங்காயம் ,பச்சை மிளகாய் ,நறுக்கிய கருவேப்பிலை ,மல்லி இலை ,முருங்கைக்கீரை தேவைப்பட்டால் உப்பும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 




இந்த கலவையை தோசை கல்லில் தோசையாக ஊற்றி எடுக்கலாம். இப்போது இன்ஸ்டன்ட் மிக்ஸ் பொடியில் செய்த அடை தோசை தயார். இப்போது அடை தோசை செய்வதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பே பருப்புகளை ஊறவைத்து அரைக்க வேண்டிய அவசியம் இல்லை . பருப்புகளை உறவைக்க மறந்தாலும் கவலை இல்லை.இந்த மிக்ஸை ரெடி பண்ணி வைத்துக் கொண்டால் ஒரு மணி நேரத்திலேயே நாம் இந்த அடை தோசையை ரெடி பண்ணி விடலாம். 


ஆபிஸ் போகும் பெண்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் வீட்டிற்கு வந்த பின்னாடி  இரவு  டிபனுக்கு  கூட இதை செய்து கொடுத்து வேலையை மேலும் சுலபமாக்கிக் கொள்ளலாம். காலை உணவுக்கு  இட்லியும், இரவு டிபனுக்கு அடை தோசையும் செய்வதோடு, இந்த மிக்ஸ் பொடியில் ஈவினிங் ஸ்னாக்ஸ் கூட செய்யலாம். அது எப்படி?


அதை நாளைக்கு சொல்லட்டா.. பை.. பை!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்