லண்டன்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் மேலும் பல நிறுவனங்களின் இணையதளங்களும் டவுன் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ் ஆப்பும் கூட சரிவர பல பகுதிகளில் செயல்படவில்லை. இது சைபர் அட்டாக்காக இருக்கலாமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும் எல்லோரும் முதலில் விழிப்பது செல்போனில்தான்.. அதிலும் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் பார்க்காமல் பொழுது விடியாது.. முடியாது. இந்த நிலையில்தான் இன்று இரவு திடீரென பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவை டவுன் ஆகின. செயலிழந்தன. யாராலும் லாகின் செய்ய முடியவில்லை. வாட்ஸ் ஆப் பின்னர் சரியானது.
இந்த செயலிகள் மட்டுமல்லாமல் மேலும் பல இணையதளங்களும் ஒரு சேர டவுன் ஆனதால் தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது சைபர் அட்டாக்காக இருக்கலாமோ என்ற சந்தேகம் கிளம்பியது.
ஒரே நேரத்தில் முன்னணி செயலிகள் செயலிழந்தது தற்செயலானதாக இருக்க முடியாது என்பது பலரின் கருத்தாகும். மெட்டா நிறுவனத்தின் புராடக்ட்தான் வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் திரெட்ஸ் ஆகியவை. திரெட்ஸும் கூட டவுன் ஆகியது. விரைவில் இது சரி செய்யப்படும் என்று மெட்டா நிறுவன அதிபர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார்.
எலான் மஸ்க்கே நக்கலடிச்சுட்டாரு குமாரு!இந்த செயலிகள் செயலிழந்ததால் மொத்தப் பேரும் டிவிட்டருக்குத் தாவினர். யார் போனா என்ன எங்கண்ணன் எலான் மஸ்க் இருக்காருடா என்று பலரும் மீம்ஸ் போட்டு பேஸ்புக்கையும், இன்ஸ்டாவையும் கலாய்த்தனர். மார்க் ஜக்கர்பர்க் வயர்களை நோண்டி சர்வரை சரி செய்வது போன்ற மீம்ஸ்களும் தூள் பறந்தன.
அதை விட காமெடி, எலான் மஸ்க்கே வந்து கிண்டலடித்து டிவீட் போடும் நிலைமைக்குப் போனதுதான். இந்த டிவீட்டை நீங்க படிக்கக் காரணம், எங்க சர்வர்கள் சரியா வேலை செய்வதால்தான் என்று கலாய்த்துள்ளார் மஸ்க். அதேபோல இன்னொரு மீம்ஸையும் அவர் ஷேர் செய்துள்ளார்.
இப்பவாச்சும் கொஞ்சம் போனுக்கு ரெஸ்ட் கொடுங்கடா என்று பல இடங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டியதையும் பார்க்க முடிந்தது. ஆக மொத்தம் இன்ஸ்டா, பேஸ்புக் இல்லாமல் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயனாளர்கள் ஆடிப் போய் விட்டனர்.
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
{{comments.comment}}