மாடு முட்டி தூக்கி வீசப்பட்ட.. திருவல்லிக்கேணி முதியவர் சுந்தரம் பரிதாப மரணம்!

Oct 28, 2023,06:29 PM IST

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.


சென்னை மாநகராட்சி சாலைகளில் முன்பெல்லாம் மாடுகளின் நடமாட்டம் சுத்தமாக இல்லாமல் இருந்தது. அதேபோல நாய்களின் நடமாட்டமும் பெரிதாக இருக்காது. ஆனால் சமீப காலமாக மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதுவும் கிடுகிடுவென அதிகரித்துக் காணப்படுகிறது. 


இதனால் பல்வேறு விபரீதங்கள் சமீப காலங்களில் ஏற்பட்டுள்ளன. மாடுகள் திடீரென மிரண்டு ஓடுவதாலும், முட்டுவதாலும், துரத்துவதாலும் சாலையில் தெருக்களில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மாடுகளை தெழுவத்தில் கட்டி வைக்காமல் தெருவில் விடுவது. வீட்டில் வளர்க்கும் நாய்களையும் தெருக்களில் சுற்றித்திரிய விடுவது போன்றவற்றால்  அபாயம் அதிகம் இருப்பதை உணராமல் சிலர் கால்நடைகளை தெருக்களில் விடுகின்றனர். 




இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசு என்ன கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கால் நடை வளர்ப்பாளர்கள் அவற்றை பொருட்படுத்துவதே  கிடையாது.  சமீபத்தில் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டியது. அதை தொடர்ந்து திருவல்லிக்கேணி பகுதியில் சுந்தரம் என்ற முதியவரை மாடு தூக்கிப் போட்டு காயப்படுத்தியது. தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.


கடந்த 18 ஆம் தேதி ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுந்தரத்தை, அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மாடு திடீரென  முட்டி கீழே தள்ளியது. இதில் சுந்தரம் பலத்த காயமடைந்தார். சுந்தரத்தை உடனடியாக மீட்ட அப்பகுதி மக்கள், அவரை ஓமந்தூர் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். கடந்த  10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுந்தரத்தை முட்டிய மாடு, கோயில் மாடு என்று தகவல் வெளியானது. ஆனால் அந்த மாடு கோயிலுக்கு சொந்தமானது அல்ல என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாடுகளால் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடப்பதால் மக்கள் அச்சத்தில் முழ்கியுள்ளனர். அக்டோபர் 19ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் விரட்டி விரட்டி பிடித்தது அனைவரும் அறிந்ததே. இவ்வாறாக மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்தாலும், மாடுகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு தான் இன்றளவும் உள்ளது. 


இதற்கு தீர்வு தான் என்ன..?

சமீபத்திய செய்திகள்

news

அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.. தெளிவான முடிவெடுத்த தலைவர் ஜானகி அம்மாள்.. ரஜினிகாந்த்

news

இந்தியாவில் எப்படி ஓட்டுக்களை எண்ணுறாங்க பாருங்க.. அமெரிக்க மானத்தை.. முடிச்சு விட்ட எலான் மஸ்க்!

news

இலவச வாக்குறுதிகள்.. மகாராஷ்டிராவை பாஜக வெல்ல முக்கியக் காரணம்.. இன்னொன்று.. பலவீனமான காங். கூட்டணி!

news

பொங்கல் நாளன்று தேர்வு.. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கிறீர்களா.. மத்திய அரசுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

அதிகம் பார்க்கும் செய்திகள்