பிறந்து 3 மணி நேரமே ஆன பெண் சிசு.. சாலையோரம் வீசப்பட்ட பரிதாபம்.. மீட்ட திருநங்கை

May 15, 2024,12:58 PM IST

செங்கல்பட்டு:  ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே, பிறந்து 3 மணிநேரமே ஆன பெண் குழந்தை சாலையோரம் வீசப்பட்ட பரிதாபம் நடந்துள்ளது.


ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அவ்வழியே சென்ற திருநங்கை ஒருவர் அந்த குழந்தையை பார்த்துள்ளார். உடலில் துணி எதுவும் இல்லாமல் எறும்புகள் சூழ்ந்த நிலையில் குழந்தை கிடந்துள்ளது. பதறிப் போன திருநங்கை குழந்தையை கையில் தூக்கி வைத்துக் கொண்டு, 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.  




இது குறித்து அந்த திருநங்கை கூறுகையில், இது எல்லாம் நியாயமா, ரோட்டுல வீசி இருக்காங்க. இங்க எல்லாம் ஆடு குட்டி போட்டாலே  நாய் தூக்கிட்டு போயிடும். இந்த பச்ச புள்ள என்னங்க பண்ணுச்சு. பாவம் இன்னக்கி காலையில தான் பிறந்திருக்கு. மாவு கூட கழுவல தலை எல்லாம் மாவு. இது எல்லாம் நியாயமே இல்ல. இந்த புள்ள என்ன பாவம் பண்ணிச்சு. பொம்பள புள்ள வேற.. இதுக்கு ஏதாவது நல்லது செய்ங்க என்று கூறி 108 ஆம்புலன்சில் வந்தவரிடம் கொடுத்து அனுப்பினார்.


அந்த குழந்தைககு 108 ஆம்புலன்சில் முதல் உதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்து வந்த அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படி இங்கே குழந்தை வந்தது, யாருடைய குழந்தை என்று பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்