விஜய் சேதுபதியை உதைத்தால்.. எக்ஸ் தளத்தில் பதிவு போட்ட.. அர்ஜூன் சம்பத்துக்கு ரூ. 4000 அபராதம்!

Aug 09, 2024,05:56 PM IST

சென்னை:   நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு தருவதாக அறிவித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு ரூ. 4000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி அவதூறு கருத்துக்களை பேசியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் ரொக்க பணம் பரிசாக அளிக்கப்படும் என பதிவிட்டிருந்தார்.


அர்ஜுன் சம்பத்தின் இந்த பதிவு தொடர்பாக கோவை கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் கே பி சாந்தி தாமாக முன்வந்து இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு கோவை குற்றவியல்  நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சந்தோஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நீதிபதி  சந்தோஷம், அர்ஜுன் சம்பத்துக்கு 4,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகள்

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 10, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

வங்க கடலில் உருவான.. காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.. வானிலை மையம் தகவல்!

news

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. தமிழ் நிலத்தின் பெருமைகள்

news

சென்னை உள்ளிட்ட.. வடதமிழ்நாட்டில் வெயில் அதிகரிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!

news

விண்ணை பிளக்கும் உற்சாகத்துடன் வெளியான குட் பேட் அக்லி.. விழா கோலம்பூண்ட திரையரங்குகள்..!

news

Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்