மும்பை: டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஹர்டிக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.எல். ராகுலுக்கு அணியில் இடமில்லை. அஸ்வின் உள்பட எந்த தமிழ்நாட்டு வீரருக்கும் அணியில் இடம் தரப்படவில்லை.
டி20 உலகக் கோப்பைத் தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இணைந்து நடைபெறவுள்ளன. மொத்தம் 20 அணிகள் இதில் விளையாடவுள்ளன. நான்கு குரூப்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா ஏ குரூப்பில் இடம் பெற்றுள்ளது.
இந்தத் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய அணி விவரம்:
ரோஹித் சர்மா, ஹர்டிக் பாண்ட்யா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பந்த், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸார் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷதீப் சிங், முகம்மது சிராஜ், ஜஸ்ப்ரீத் பும்ரா.
ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.
இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட கே. நடராஜன், அஸ்வின் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதேபோல ஷாருக் கான் உள்ளிட்ட தமிழ்நாட்டு வீரரர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அதேபோல கர்நாடகத்திலிருந்தும் ஒரு வீரர் கூட இடம் பெறவில்லை. இருந்த ஒரே வீரரான கே.எல். ராகுலையும் கூட சேர்க்காமல் விட்டுள்ளனர். இது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.
ஜூன் 5ம் தேதி இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை நியூயார்க்கில் சந்திக்கவுள்ளது. அதன் பிறகு அதே மைதானத்தில் ஜூன் 9ம் தேதி பாகிஸ்தானுடன் இந்தியா மோதும். இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலேயே நடைபெறவுள்ளன. அமெரிக்காவுடன் ஜூன் 12 மற்றும் கனடாவுடன் ஜூன் 15 தேதிகளில் இந்தியா மோதவுள்ளது.
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}