டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றவுள்ளார். இதற்காக இந்த வார இறுதியில் அவர் ரஷ்யா செல்லவுள்ளார் என்று கூறப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் அந்த இரு நாடுகளுக்கும் இதுவரை வெற்றி தரவில்லை. மாறாக பெரும் இழப்பையே ஏற்படுத்தி வருகிறது. பல அப்பாவிகளின் உயிர்கள்தான் தேவையில்லாமல் பறி போயுள்ளன. இந்த நிலையில் இந்தப் போரை நிறுத்தும் முயற்சியில் தற்போது இந்தியா தீவிர அக்கறை காட்டி வருகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கையை ஏற்று இந்தியா இந்த சமரச முயற்சியில் இறங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, முதலில் ரஷ்யாவுக்குச் சென்றார். பின்னர் உக்ரைன் நாட்டுக்கும் போயிருந்தார். இதன் மூலம் சமரச முயற்சியில் இந்தியா முக்கியப் பங்காற்றி வருவது உறுதியானது. உக்ரைனுடனான போரை நிறுத்தும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ள சில நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக புடினும் கூட விளக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தப் பேச்சுக்கள் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளன.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இந்த வார இறுதியில் மாஸ்கோ செல்லவுள்ளார். முக்கியப் பேச்சுவார்த்தைகளில் அவர் பங்கேற்கவுள்ளார். உக்ரைன் போய் விட்டு வந்த பிறகு ஆகஸ்ட் 27ம் தேதி ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து தற்போது அஜீத் தோவலின் மாஸ்கோ பயணம் நடைபெறவுள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் இரு நாடுகளும் வெளியிடவில்லை.
இந்தியா தவிர சீனா, பிரேசில் ஆகிய நாடுகளும் கூட ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர இத்தாலியும் கூட இந்த சமரச பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி இதுகுறித்துக் கூறுகையில், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா, இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முடியும். விரைவில் இந்தப் பிரச்சினை தீர வேண்டும் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
{{comments.comment}}