அமெரிக்காவுக்குள் ஊடுறுவல்.. டிரம்ப் சுவற்றிலிருந்து குதித்து இந்தியர் பலி.. 2 பேர் கைது!

Feb 26, 2023,11:10 AM IST
அகமதாபாத்: அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுறுவும் முயற்சியின்போது, "டிரம்ப் சுவர்" பகுதி வழியாக, சுவர் ஏறிக் குதித்து நுழைய முயன்ற இந்தியர் கீழே விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக 2 பேரை குஜராத் போலீஸார் கைது  செய்துள்ளனர்.

மெக்சிகோவிலிருந்து இந்த சுவர் வழியாக எகிறிக் குதித்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோதுதான் அந்த இந்தியர் பரிதாபமாக சுவற்றின் உச்சியிலிருந்து கீழே விழுந்து பலியானார். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்களாகி விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது குஜராத் போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். அதில்  அகமதாபாத்தைச் சேர்ந்த ஒருவரையும், காந்தி நகரைச் சேர்ந்த ஒருவரையும் தற்போது கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரிஜ்குமார் யாதவ். இவருக்கு அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என்று ஆசையாக இருந்துள்ளது. இதுதொடர்பாக பலரிடமும் ஆலோசனை கேட்டபோது, நேரடியாக போனால் அங்கு செட்டிலாவது கஷ்டம். இதற்காகவே சில புரோக்கர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாக போனால், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து தங்கிக் கொள்ளலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனர்.



இதையடுத்து இதுதொடர்பான புரோக்கரை அணுகிய பிரிஜ்குமார் யாதவ் , அமெரிக்காவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதன் பின்னர் 2022ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி தனது மனைவி பூஜா மற்றும் மகன் தன்மய் ஆகியோருடன் துருக்கி  நாட்டின் இஸ்தான்புல் நகருக்கு சென்றார். அங்கிருந்து  புரோக்கர் கும்பல் இவர்களை மெக்சிகோவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. 

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுறுவது அடுத்த திட்டம். மெக்சிகோ வழியாகத்தான் பெரும்பாலான சட்ட விரோத குடியேற்றம் நடைபெறுவதால், டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்தபோது அமரெிக்க - மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச் சுவர் கட்டினார். இது  அப்போது பெரும் சர்ச்சையை எழுப்பியது. ஆனாலும் அதை டிரம்ப் கண்டுகொள்ளவில்லை. இந்த தடுப்புச் சுவர் வந்த பிறகு சட்டவிரோத ஊடுறுவல் வெகுவாக குறைந்தது. இந்த சுவரை டிரம்ப் சுவர் என்று அமெரிக்கர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.

இந்த சுவர் வழியாகத்தான் பிரிஜ்குமார் குடும்பத்தை ஊடுறுவ வைக்க புரோக்கர் கும்பல் திட்டமிட்டிருந்தது. கஷ்டப்பட்டு சுவர் வரை வந்து விட்ட பிரிஜ்குமார் குடும்பத்துக்கு.. அங்குதான் தலைவிதி.. வலை விரித்துக் காத்திருந்தது. பிரிஜ்குமார், பூஜா, தன்மய் மூன்று பேரும் சுவர் ஏறி அமெரிக்காவுக்குள் நுழைவதாக பிளான். மூன்று பேரும் சுவர் ஏறியும் விட்டனர். ஆனால் தடுமாறி சுவர் உச்சியிலிருந்து கீழே விழுந்தனர். பூஜா அமெரிக்க எல்லைக்குள் விழுந்தார். தன்மய் மெக்சிகோ எல்லைக்குள் விழுந்தார். இருவரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால்  பிரிஜ்குமார் யாதவ் உயிரிழந்து விட்டார்.




பிரிஜ்குமார் யாதவின்  பூர்வீகம் உத்தரப்பிரதேச மாநிலம்  ஆகும். ஆனால் நீண்ட காலமாக அவரது  குடும்பம் குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் கலோல் தாலுகாவில் வசிக்கிறது. பிரிஜ்குமார் மரணத்தைத் தொடர்ந்து அவரை அமெரிக்காவுக்கு அனுப்பிய புரோக்கர்கள் மீது அவரது குடும்பத்தினர் ��ுகார் கொடுத்தனர். இது���ோல சுவர்  ஏறிக் குதிக்க வேண்டும் என்றெல்லாம் புரோக்கர்கள் முதலிலேயே கூறவில்லை. இதுபோல நிர்ப்பந்தமான நிலைக்குக் கொண்டு சென்று பிரிஜ்குமாரின் உயிரைப் பறித்து விட்டதாக அவர்கள் புகாரில் கூறியிருந்தனர்.

இதையடுத்து போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதில்  2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

குஜராத் மாநிலத்திலிருந்து ஏராளமான பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்வது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படித்தான் கலோல் தாலுகாவைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குடும்பத்தினர் சட்டவிரோதமாக அமெரிக்கா செல்ல முயன்று அமெரிக்கா - கனடா எல்லையில் கடும் பனியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதே ஆண்டு மார்ச்  மாதம் குஜராத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள், படகு மூலம் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்று, கனடா எல்லை அருகே உள்ள செயின்ட் ரெஜிஸ் ஆற்றில் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கி கைதானார்கள் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்