வாஷிங்டன்: வாஷிங்டனில் ஒரு ஹோட்டலில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட 41 வயதான இந்தியர், காயத்திலிருந்து மீளாமல் மரணமடைந்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தியர்கள் மீதும், இந்திய அமெரிக்கர்கள் மீதும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வாஷிங்டனில் தாக்குதலுக்குள்ளான விவேக் தனேஜா என்ற இந்தியர் காயம் காரணமாக மரணமடைந்துள்ளார்.
விர்ஜீனியாவில வசித்து வந்த விவேக் தனேஜா, பிப்ரவரி 2ம் தேதி ஜப்பானிய உணவகம் ஒன்றில் இவர் சாப்பிடப் போயிருந்தபோது சிலருடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் விவேக்கை சரமாரியாக தாக்கினர். தரையில் தள்ளி தலையில் அடித்ததால் விவேக் படுகாயமடைந்தார்.
நினைவிழந்த நிலையில் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விவேக் தனேஜா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக்கை தாக்கிய நபரின் சிசிடிவி படத்தை வைத்து போலீஸார் அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் குறித்த தகவல் கொடுப்போருக்கு 25,000 டாலர் பரிசளிக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இந்தியர் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் இப்படித்தான் சமீபத்தில் ஒரு இந்தியரை திருடர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.. அவரது பெயர் சையத் மஜாஹிர் அலி. இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். தன்னைக் காப்பாற்றுமாறு கோர் அவர் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தாக்குதலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். சமீர் காமத், ஷிரேயாஸ் ரெட்டி பெனிகர், நீல் ஆச்சார்யா, விவேக் சைனி, அகுல் தவான் ஆகியோரே அவர்கள்.
இந்த சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறுகையில், இந்த சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
{{comments.comment}}