Indian 2: அவரா வயசானவரு?.. ரிலீசிற்கு முன்பே சோஷியல் மீடியாவை தெறிக்க விடும் ஷங்கர் டீம்

Jul 10, 2024,04:01 PM IST

சென்னை : இந்தியன் 2 படம் ரிலீசை முன்னிட்டு, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு டீசர் என வெளியிட்டு, சோஷியல் மீடியாவை அலற விட்டு வருகிறது இந்தியன் 2 டீம் மற்றும் லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம்.


லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில், டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு உருவாகி, ரிலீசிற்கு தயாராகி உள்ளது இந்தியன் 2 படம். கமல்ஹாசன், சித்தார்த், பாபி சின்ஹா, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்த படம் இந்தியன் 2 பல ஆண்டுகளாக எடுக்கப்பட்டு, பல பிரச்சனைகளை தாண்டி ஜூலை 12ம் தேதி ரிலீசாக உள்ளது. 




1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், கமல் நடித்து வெளியாகி சூப்பர்ஹிட்டான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக மிக பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது இந்தியன் 2. 


லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரித்து, வெளியிட உள்ளது. படத்தின் நீளம் கருதி இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியன் 2 ஜூலை 12ம் தேதியும், அடுத்த பாகம் இந்தியன் 3 என்ற பெயரில் 2025ம் ஆண்டும் வெளியிடப்பட உள்ளது. கிட்டதட்ட ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தின் ரிலீசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 


இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபனான சில மணி நேரங்களிலேயே டிக்கெட்கள் அனைத்தும் புக் ஆகி விட்டன. ஜூலை 14 வரை ஐமேக்ஸ் திரைகளில் டிக்கெட்கள் எதுவும் காலி இல்லை.


இந்தியன் 2 ரிலீசை முன்னிட்டு நேற்று பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட லைகா புரொடக்ஷன்ஸ், இன்று காலை முதல் 2 மணி நேரத்திற்கு ஒரு க்ளிம்ஸ் என வெளியிட்டு வருகிறது. காலையில் இந்தியன் 2 படத்தின் டிக்கெட் புக்கிங் ஓப்பனானதை தெரிவிக்கும் வகையில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் பேசிக் கொள்ளும் ஒரு க்ளிம்சை படக்குழு வெளியிட்டது. இது வெளியிட்ட 2 மணி நேரத்திலேயே போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பாபி சின்ஹா, சேனாபதியின்  வர்மகலை குறித்தும், அவரின் வீரம் குறித்து பேசும் அடுத்த க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.




அந்த வீடியோவின் துவக்கத்தில், அருகில் இருப்பவர், அவர் வயதானவர் சார் என சொல்ல, அதற்கு பதில் கூறும் பாபி சின்ஹா, 118 வயது கும்ஃபூ மாஸ்டர் ஒருவரின் வீடியோவை காட்டி, வயசானவரா அவரு என கேட்டு, சேனாதிபதி பற்றி விளக்குகிறார். இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.


லைகா புரொடக்ஷன்ஸ் அடுத்தடுத்து வெளியிட்டு வரும் வீடியோ, இந்தியன் 2 டிக்கெட் புக்கிங் ஓபனிங் ஆகியவற்றால் எக்ஸ் தளத்தில் #Indian2 என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. இதை பலரும் டேக் செய்து தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்