கமல்ஹாசனின் இந்தியன் 2 இசை வெளியீடு.. பங்கேற்க வரும் முக்கிய பிரபலங்கள்.. யார் யார்னு தெரியுமா?

May 23, 2024,12:32 PM IST

சென்னை:  பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், 1996 ஆம் ஆண்டு இந்தியன் படம் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இது தவிர விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் இப்படம் சாதனை படைத்தது. ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தார். இவருடன் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.




இந்தியன் படம் வெளிவந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடலும் நேற்று வெளியாகி விட்டது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டையும் பிரமாண்டமாக நடத்த ஷங்கர் முடிவு செய்துள்ளார். 


ஷங்கர் தற்போது ராம் சரண் நடிப்பில்,கேம் ரேஞ்சர் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராம் சரண், அவரது தந்தை சிரஞ்சீவி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை இசை வெளியீட்டு விழாவுக்கு அழைக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளாரம்.  ஜூன் 1ஆம் தேதியில் சென்னை நேரு  ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் நடிகர் கமலஹாசன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர். இசை வெளியீட்டு விழாவையே பிரமாண்டமாக நடத்தினால் படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரிக்கும் என்பது லைக்காவின் திட்டமாகும்.


ரெட் ஜெயிண்ட் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இந்தியன் 2 படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

news

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!

news

எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்